டெல்லியில் ராம்லீலா மைதானத்தில் 'நாட்டை காப்போம்' என்ற பெயரில் காங்கிரஸ் கட்சி சார்பில் பேரணி ஒன்று இன்று நடந்தது. இந்த கூட்டத்தில் பங்கேற்று பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர்  ப.சிதம்பரம்,

மோடி தலைமையிலான அரசு  ஆறே மாதங்களில்,  நாட்டின் பொருளாதாரத்தை சீரழித்து விட்டது. ஆனால் நிதி  அமைச்சரோ எல்லாம் சரியாக இருப்பதாகவும், உலக அளவில் நாட்டின் பொருளாதாரம் வளர்ந்துள்ளதாக ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்து வருகிறார். 

உற்பத்தி, விற்பனை என அனைத்தும் படு மந்த கதியில் இருப்பதாகவும் ஜிடிபி அதலபாதாளத்துக்கு சென்றுவிட்டதாகவும் அவ் குற்றம்சாட்டினார்.

பொருளாதார வீழ்ச்சியை தடுக்க மத்திய அரசுக்கு எந்த திட்டமும் இல்லை என்றும் சிதம்பரம் அதிரடியாக தெரிவித்தார்.