Asianet News TamilAsianet News Tamil

சிவகங்கை தொகுதியில் கதறவிடும் காங்கிரஸ்... ப.சிதம்பரம் குடும்பத்திற்கு சீட் இல்லை..?

திமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதி இம்முறையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அங்கு ப.சிதம்பரம் குடும்பத்தில் இருந்து கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக போட்டியிட உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போது வேறு தகவல் உலா வருகிறது. 

P. Chidambaram's family does not have a seat?
Author
Tamil Nadu, First Published Mar 20, 2019, 5:12 PM IST

திமுக கூட்டணியில் சிவகங்கை தொகுதி இம்முறையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருக்கிறது. அங்கு ப.சிதம்பரம் குடும்பத்தில் இருந்து கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக போட்டியிட உள்ளதாகக் கூறப்பட்டது. ஆனால், இப்போது வேறு தகவல் உலா வருகிறது. P. Chidambaram's family does not have a seat?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு புதுவை உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. அதில் சிவகங்கை தொகுதியும் ஒன்று. திமுக கூட்டணியில் திமுக இருந்தால் சிவகங்கை தொகுதி ப.சிதம்பரத்திற்காக காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவது வாடிக்கை. அதேபோல் இம்முறையும் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு பாஜகவை சேர்ந்த ஹெச்.ராஜா போட்டியிட இருக்கிறார். இந்நிலையில் ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம், அல்லது அவரது மனைவி டாக்டர் ஸ்ரீநிதி களமிறக்கப்படலாம் எனக்கூறப்படுகிறது.

P. Chidambaram's family does not have a seat?

ஆனாலும், சிதம்பரம் குடும்பத்தினர் தரப்பில் இருந்து சத்தமில்லாமல் கிடக்கிறது. கார்த்தி பல வழக்குகளில் சிக்கித் தவிப்பதால் அவருக்கு காங்கிரஸ் தரப்பில் சீட் கொடுப்பதில் தயக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் தனக்காக விருப்பமனு கொடுக்கச் சொல்லி இருந்தார் கார்த்தி சிதம்பரம். P. Chidambaram's family does not have a seat?

இதனிடையே, ‘சிவகங்கை மக்களவை தொகுதி வெற்றி வேட்பாளராக முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் வரும் 25.3.19 அன்று களம் இறங்குவார்’ என்று அவரது ஆதரவாளர்கள் சமூகவலைதளங்களில் சத்தமில்லாமல் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இதனால் கார்த்தி சிதம்பரம் சிவகங்கையில் களமிறக்கப்படுவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இந்த சிதம்பர ரகசியத்துக்கு இன்னும் ஓரிரு நாளில் விடைகிடைக்கலாம். 

Follow Us:
Download App:
  • android
  • ios