ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைதாகியுள்ள ப.சிதம்பரத்தின் சிறைவாசம்  இன்னும் 20 ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க வாய்ப்புள்ளதாக  பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி அதிரடியாக தெரிவித்துள்ளார். அவரின் இந்த கருத்து சிதம்பரத்தின் குடும்பத்தினர் மற்றும்  ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் கைதாகி சிறையில் இருந்து வருகிறார். அவரது ஜாமின் மனுக்கள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டு வருவதுடன் அவரிக்கு சிறை வாசத்தை நீதிமன்றம் நீட்டித்து வருகிறது. அவரை கஸ்டடியில் எடுத்து விசாரித்தும் அவரிடத்திலிருந்து எந்த தகவலையும் பெற முடியவில்லை என்றும், அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுக்கிறார் என்றும் சிபிஐ அவர் மீது தெரிவித்த புகாரே, அவரின் ஜாமின் மனுக்குகள் தொடர்ந்து  நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் என கூறப்படுகிறது.  இந்த நிலையில் அவரை திகார் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரதவு பிறப்பித்துள்ளதை அடுத்து திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் சிதம்பரம். 

இந் நிலையில் பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமாக சுப்பிரமணியன் சுவாமி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது பேசிய அவர்.தற்போது  நாட்டில் ஏற்பட்டுள்ள  பொருளாதாரம் வீழ்ச்சியில் இருந்து மீள மோடி அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறார். எனவே அதைப்பற்றி யாரும் கவலைப்பட தேவையில்லை என்றார்.  பாஜக கட்சிப்பதவியில் இருந்த  தமிழிசைக்கு ஆளுனர் பதவி கொடுத்தது சர்காரியா கமிஷன் அடிப்படையில் தவறு என்று கூறிய புதுவை முதலமைச்சர் நாராயணசாமிக்கு அரசியல் ஞானம் குறைவு என்றும் சுப்பிரமணியன் சுவாமி அவரை கடுமையாக விமர்சித்தார். ஊழலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து சிறைக்கு சென்று கொண்டுள்ளனர் என்ற சாமி,

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிதம்பரத்தின் மீது ஏர்செல் மேக்சிஸ். ஏர் இந்தியா விமானத்திற்கு ஏர் பஸ் வாங்கியதில் ஊழல் உள்ளிட்ட  8க்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றார். இந்த அத்தனை வழக்குகளையும் விசாரித்து, அதில்  தீர்ப்பு வெளியாகும் பட்சத்தில் குறைந்தது அவருக்கு 20 ஆண்டுகளுக்கு மேல் அவரின் சிறைவாசம் நீடிக்க வாய்ப்புள்ளது என்றார். சாமியின் இந்த கருத்து சிதம்பரத்தின் குடும்பத்தினர் மற்றும் அவரின் ஆதரவாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.