எங்களது ஒரு தலை காதல் இருதலை காதலாக மாற வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் விருப்பம் தெரிவித்துள்ளார். 

பா.ம.க சார்பில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தங்கள் கட்சி செய்தியாளர்கள் மீது காதல் கொண்டு இருப்பதாக தெரிவித்தார். பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் ஆண்டுதோறும் வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியிடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான அறிக்கையை ராமதாஸ் சென்னையில் வெளியிட்டார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ’’செய்தியாளர்கள் மீது பா.ம.க மிகுந்த காதல் கொண்டிருக்கிறது. ஆனால் எங்களுடைய காதல் எப்போதும் ஒருதலைக் காதலாகவே இருந்து வருகிறது. இதனால் மிகுந்த வேதனைப்படுகிறோம். ஊடகங்கள் எங்களது காதலை புரிந்து கொள்ளாமல், எங்கள் செய்திகளுக்கு முக்கியத்துவம் தராமல் இருந்து வருகிறது. இந்த காதல் இருதலைக் காதலாக மாற வேண்டும் என்று விருப்பம். 

தொடர்ந்து பேசிய அவர், மீண்டும் ஒரு தலை காதல் மட்டுமே இருப்பதால் வருத்தமளிப்பதாக ராமதாஸ் குறிப்பிட்டார். இதனால் அங்கிருந்த கட்சி நிர்வாகிகள் செய்தியாளர்கள் அனைவரும் சிரித்துக்கொண்டே கலைந்து சென்றனர்.