தமிழகத்தில் ஆளுங்கட்சி ஆக வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் இலக்கு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் ஆளுங்கட்சி ஆக வேண்டும் என்பதே தமிழக பாஜகவின் இலக்கு என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டம் ஏற்காடு அருகே நாகநல்லூர் கிராமத்தில் பாஜக சார்பில், மலைவாழ் மக்களுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கலந்துகொண்டு மலைவாழ் மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். பின்னர் பேசிய அண்ணாமலை, மலைவாழ் மக்களுக்காக பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாக கூறினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை கூறியதாவது: ஊழலை பற்றி பேசினாலே வழக்குப் போடுவது வாடிக்கையாகி வருகிறது. வழக்குப் போட்டு வாயை அடைத்து விடலாம் என சிலர் நினைக்கின்றனர். ஆனால் நான் வழக்குக்கெல்லாம் பயந்தவன் கிடையாது. எந்த வழக்கையும் எதிர்கொள்ள தயார். இத்தகைய கம்யூட்டர் காலத்தில் யாராலும் ஊழலை மறைக்க முடியாது. தமிழகத்தில் நடைபெற்று வரும் ஊழல் தொடர்பான இரண்டாவது பட்டியால் தயார் செய்யப்பட்டுள்ளது. கூடிய விரைவில் இரண்டாவது பட்டியலை வெளியிடுவோம் என்றார்.

தமிழகத்தில் பாஜக எதிர்க்கட்டியாக செயல்படுவதாக கூறப்படுகிறதே என்ற கேள்விக்கு பதிலளித்த அண்ணாமலை, திமுக தான் பாஜகவை தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சியாக மாற்றியுள்ளது. ஆனால் எங்கள் நோக்கம் எதிர்க்கட்சி ஆவது இல்லை. தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றி ஆளுங்கட்சி ஆக வேண்டும் என்பதே எங்கள் இலக்கு. அரசியலுக்கு அப்பாற்பட்ட ஆதீனங்களை மிரட்டும் வேலையை அமைச்சர் சேகர்பாபு கைவிட வேண்டும். ஆதினம், தீட்சிதர்கள் விவகாரத்தில் திமுக அரசின் நடவடிக்கை மிரட்டக்கூடிய வகையில் அமைந்துள்ளது என்று தெரிவித்தார்.