ஒரத்தநாடு தொகுதி திமுக எம்எல்ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், ஆட்சியர்கள் என பலரும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில் தஞ்சாவூர் மாவட்ட ஒரத்தநாடு தொகுதி திமுக எம்.எல்.ஏ ராமச்சந்திரனுக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே அவர் சென்னை போரூரில் உள்ள ராமசந்திரா மருத்துவமனையில் இருதய மற்றும் சுவாசக்கோளாறு காரணமாக அவர் சிகிச்சைப் பெற்று வருகிறார். இதற்கிடையே அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அமைச்சர்கள் உட்பட 23 எம்.எல்.ஏ.க்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.