அதிமுகவின் இரு அணிளும் இன்று இணையவுள்ளதையடுத்து துணை முதலமைச்சராக ஓபிஎஸ் பதவியேற்கிறார். இதையடுத்து அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்த ஆளுநர் இன்று அவசரமாக சென்னை புறப்பட்டு வருகிறார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி  பழனிசாமி தலைமையில் கட்சி நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.  பகல் 12 மணியளவில் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ்ம்  அதிமுக கட்சி அலுவலகத்திற்கு வர உள்ளார்.

இதைத் தொடர்ந்து ஓபிஎஸ் - இபிஎஸ்  இருவரும் சந்திக்க உள்ளதாகவும், இந்த சந்திப்பிற்கு பிறகு அதிமுக இரு அணிகள் இணைப்பு குறித்த அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரு அணிகளும் இணைப்பிற்கு பிறகு இருவரும் ஜெயலலிதா நினைவிடத்திற்கு செல்ல உள்ளதாகவும் , அணிகள் இணைப்பு காரணமாக ஓபிஎஸ்க்கு  துணை முதல்வர் பதவியும், மாஃபா பாண்டியராஜனுக்கு அமைச்சர் பதவியும் வழங்கப்பட உள்ளதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே தமிழக ஆளுநர்  வித்யாசாகர் ராவ், மும்பையில் இருந்து இன்று அவசரமாக சென்னை வர உள்ளார். மும்பையில் அனைத்து நிகழ்ச்சிகளையும்  அவர்  ரத்து செய்துவிட்டதாகவும் ஆளுநரின் உதவியாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது,

இன்று , காலை 9.45 மணியளவில் மும்பையில் இருந்து ஆளுநர் சென்னை புறப்பட உள்ளார். இதனால் இன்று பதவியேற்பு, அமைச்சரவை மாற்றம் நடப்பதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன.