கள்ளகுறிச்சி அதிமுக எம்எல்ஏ இன்று சென்னையில் டிடிவி தினகரனை சந்தித்து  ஆதரவு தெரிவித்தார்.அப்போது  செய்தியாளர்களை சந்தித்து பேசிய தினகரன், துணை  முதல்வர் பன்னீர் செல்வதை பற்றி பேசினார்.

அதில், EPS  ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் முடிவடைந்து விட்டதால்,OPS  முதல்வர் பதவியை கேட்கிறார்.அவர்கள் தர மறுத்து வருவதால் கோபத்தில் உண்மையை  சொல்லி உள்ளார் OPS

 தமிழகத்தில் அதிமுக ஆட்சியை இயக்குவது பாஜக தான் என அனைவருக்குமே தெரியும்...தற்போது  துணை முதல்வர் பதவியில் இருப்பது அவருக்கு வெறுப்பாக  உள்ளதால் தான் பிரதமர் மோடி சொல்லி தான் எடப்பாடியுடன் இணைந்தேன் என  தெரிவித்து உள்ளார் ஓபிஎஸ் என  தினகரன் தெரிவித்து உள்ளார்

இதில் என்ன ஒரு செய்தி என்றால்,எம்எல்ஏ பிரபு ஆதரவு தெரிவித்த பின்பு தான்  தினகரன் இவ்வாறு பேசி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், எம்எல்ஏ பிரபு  ஸ்லீப்பர் செல் கிடையாது...அரசின் மீது நம்பிக்கை  இல்லாததால் தான் இங்கு வந்துள்ளார் என்றும் தெரிவித்து உள்ளார்.