அதிமுக இருப்பதே பதவிக்காக தான் தவிர சேவை செய்வதற்காக இல்லை. ஆகையால் ஓ.பி.எஸ்- எடப்பாடி இருவரும் முதல்வராகப்போவதில்லை. பிறகு ஏன் இந்த வீண் சண்டை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன்  கேள்வி எழுப்பியுள்ளார்.

தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ‘’விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு எதிராக இயற்றப்பட்டிருக்கும் கொடிய சட்டங்கள் அவர்களை கடுமையாக பாதிக்கக் கூடியது. சட்டங்களை திரும்பப் பெறும்வரை போராட்டம் நடைபெறும்.  வரும் 12ஆம் தேதி தமிழகம் முழுவதும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில்  மத்திய மாநில அரசு அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தப்படும்.
 
அதிமுக இருப்பதே பதவிக்காக தானே தவிர, சேவை செய்வதற்காக இல்லை. இபிஎஸ், ஓபிஸ் ஆகிய இருவருமே முதலமைச்சராக வரப்போவது இல்லை. இதற்கு ஏன் வீணாக சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்? என்று அவர் கேள்வி எழுப்பினார்.