நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் தலைப்பு பங்கேற்க முடிவு செய்துள்ளதாக முன்னால் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். 

நாளை நடைபெற உள்ள அதிமுக பொதுக்குழுவில் ஓ பன்னீர்செல்வம் தரப்பு பங்கேற்க முடிவு செய்துள்ளதாக முன்னால் அமைச்சர் வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். பன்னீர் செல்வத்துடன் ஆலோசனை நடத்திய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்

எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் ஒற்றை தலைமை என்ற முழக்கத்தை முன்வைத்து வரும் நிலையில் நாளை அதிமுக பொதுக் குழு நடைபெற உள்ளது. ஆனால் அக்கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தி வருகிறார். இரட்டைத் தலைமையில் கீழ் கட்சி சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், ஒற்றைத் தலைமைக்கு என்ன அவசியம் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கட்சி இப்போதை இருப்பதை விட வலிமையாக வேகமாக செயல்பட வேண்டும் என்றால் ஒற்றைத் தலைமையே அவசியம் என்றுமு எடப்பாடி தரப்பினர் கூறிவருகின்றனர். 

இதனால்ஓபிஎஸ்- இபிஎஸ் அணி என கட்சி இரண்டாக பிரிந்து நிற்கிறது. ஆனால் நாளை நடைபெற உள்ள பொதுக்குழுக் கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஒற்றைத் தலைமையாக நியமிக்கப்படலாம் என்ற சூழலில் இருந்துவரும் நிலையில், திட்டமிட்டபடி நாளை பொதுக்குழு நடந்தே தீரும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் உறுதியாக இருந்து வருகின்றனர். மேலும் கட்சியில் உள்ள 80% மாவட்ட செயலாளர்கள், முதல் முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள் வரை எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

தனக்கு நிர்வாகிகள் மாவட்ட செயலாளர் மத்தியில் ஆதரவு இல்லை என்பதை உணர்ந்து கொண்ட ஓ. பன்னீர்செல்வம் பொதுக்குழுவை ஒத்தி வைக்க வேண்டும் என்றும் அல்லது பொதுகுழுவுக்கு அனுமதி அளிக்க கூடாது எனவும் நீதிமன்றத்தை நாடியுள்ளார். இந்நிலையில் இரு தரப்பினரும் நீதிமன்றத்தில் காரசாரமாக தங்களது வாதங்களை முன்வைத்து வருகின்றனர். இது ஒருபுறம் உள்ள நிலையில் நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவுக்கு ஓ.பன்னீர்செல்வம் வருகை தரவேண்டும் என எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதி உள்ளார்.

அதில் பொதுக்குழு நடத்துவதால் எந்த பிரச்சினையும் இல்லை, சட்டம் ஒழுங்கு ஏற்படும் சூழல் ஏதுமில்லை, ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் இருவரும் பொதுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டும், எந்த பிரச்சினையாக இருந்தாலும் பொதுக்குழுவில் பேசி தீர்த்துக்கொள்ளலாம் என அவர் கூறியுள்ளார். நிர்வாகிகள் மதியத்திய்ல தனக்கு செல்வாக்கு இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ள ஓ. பன்னீர்செல்வம் பொதுக்குழுவுக்கு எதிராக தொடுத்துள்ள மனு இன்று விசாரணைக்கு வரும் நிலையில் இருந்து வரும் நிலையில் பொதுக்குழு தொடர்பாக எந்த முடிவாக இருந்தாலும் இன்று மாலை தெரிவிப்பதாக கூறியுள்ளார்.

ஓபிஎஸ்சின் இந்த பதில் எடப்பாடி பழனிச்சாமி தரப்பினருக்கு நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஓ.பன்னீர் செல்வத்துடனான ஆலோசனைக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், பொதுக்குழுவை ஏன் புறக்கணிக்க வேண்டும் என்றும், இன்று மாலை ஓபிஎஸ் உடன் ஆலோசனைக்குப் பின்னர் பொதுக்குழுவில் பங்கேற்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் நாளை நடைபெற உள்ள பொதுக்குழுவில் பன்னீர்செல்வம் தரப்பு பங்கேற்க முடிவு செய்துள்ளது என்றும் கூறியுள்ளார். அனைத்தையும் விட்டுக் கொடுத்த தான் இந்த முறை விட்டுக் கொடுக்கப் போவதில்லை என தனது ஆதரவாளர்கள் மத்தியில் பேசி வந்த பன்னீர் செல்வம், தற்போதைய சூழ்நிலையை புரிந்து கொண்டு தனது நிலைப்பாட்டிலிருந்து இறங்கி வர தயாராகி விட்டாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.