அதிமுகவின் அவைத்தலைவரே ஓ.பி.எஸ்ஸிடம் ஐக்கியமாகிவிட்டதால் கையை பிசைந்து நிற்கிறது சசிகலா தரப்பு

ஓபி.எஸ்க்கு பின்னால் கைகட்டி கொண்டிருந்த சிங்கை ஜி.ராமச்சந்திரன் ஐ.டி பிரிவு செயலாளராக இருந்தார்.

பொருளாளர் ஓ.பி.எஸ் சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியதால் அவருடைய பதவியையும் பறித்தார்.

தற்போது அதிமுகவின் உச்சபட்ச அதிகாரம் படைத்த அவைத்தலைவர் எனும் பதவியை அலங்கரிக்கும் மதுசூதனன் ஓ.பி.எஸ்வுடன் கைகோர்த்துள்ளதால் அவரை நீக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆனால் அப்படி எளிதாக ஒரு கட்சியின் அவைத்தலைவரை நீக்க முடியாது என “By Law” எனப்படும் உட்கட்சி சட்டதிட்டங்களை நன்கு அறிந்தவர்கள்

அவைத்தலைவர் எனும் பதவி கட்சியின் பொதுச்செயலாளர் பதவிக்கு இணையானது மற்றும் அவருக்கே வழிகாட்ட கூடிய உச்ச அதிகாரம் கொண்ட பதவியாகும்.

இங்கு சசிகலா தரப்புக்கு சிக்கலே அவர் தற்காலிக பொதுச்செயலாளராக இருக்கிறார் என்பதுதான்.

தற்காலிக பொதுச்செயலாளராக நியமனம் செய்யப்பட்ட ஒருவர் ( சசிகலா தேர்த்தேடுக்கபடவில்லை ) உயர் அதிகார பதவியில் இருப்பவர்களை நீக்க முடியாது என அதிமுக சட்டத்தில் இருப்பதாக தெரிகிறது.

ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்களை பொறுப்பிலிருந்து நீக்கியது செல்லாது என்பதால் அதிமுகவின் உயர் பொறுப்பில் உள்ள அவைத்தலைவர் மற்றும் பொருளாளர் ஒரு அணியாக கைகோர்த்திருப்பதால் சசிகலா தரப்புக்கு நிச்சயம் தலைவலிதான்.

காரணம் பொருளாளர் பதவியில் தொடர்ந்து நீடிக்கும் பன்னீர்தான் “சைனிங் அதாரிட்டி” எனப்படும் வரவு செலவுகளில் கையெழுத்திடும் அதிகாரபூர்வ நபராவார்.

கட்சியின் கோடிக்கணக்கான ரூபாய் பணம் வங்கி கணக்கில் உள்ளது. அதாவது இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஜெயலலிதா வெளியிட்டுள்ள கணக்கின்படி, அதிமுக கட்சியின் சார்பாக 230 கோடி ரூபாயும், அண்ணா தொழிற்சங்கம் சார்பில் 10 கோடி ரூபாயும், பேங்க் ஆப் இந்தியா மற்றும் கரூர் வைஷ்யா வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்தார்.

இந்நிலையில் பணம் போடுவது என்றாலும் எடுப்பது என்றாலும் ஓ.பி.எஸ் அனுமதி அவசியம்.

இதனால் சுமார் கட்சியின் சேமிப்பு பணம் ஓ.பி.எஸ் என்ற தனிநபர் கையில் சிக்கியுள்ளது.

இதனால் பொருளாளர் கையில் பணமும் அவைத்தலைவர் கட்டுபாட்டில் கட்சி நிர்வாகமும் இருப்பதால் அதிமுக உயர் அதிகார மையமே ஓ.பி.எஸ் கையில் வந்துவிட்டது போன்ற தோற்றம் உருவாகிவிட்டது. ஓரளவுக்கு இது உண்மையும் கூட.

அவைத்தலைவரும் பொருளாளரும் கைகோர்த்துள்ள நிலையில் பொதுச்செயலாளருக்கான மறுதேர்தல் நடத்தபட்டால் சுமார் 2700 உறுபினர்களில் 1600 பேர் வரை ஓ.பி.எஸ்க்கு ஆதரவு தெரிவித்து விட்டாலே ரெட்டை இல்லை சின்னம் கூட பன்னீர்க்கு வர வாய்ப்புள்ளது.

“பேசாமலேயே” இந்த போடு போடும் ஓ.பி.எஸ்சை பார்த்து அதிமுக காரர்கள் மட்டுமல்ல ஒட்டுமொத்த மக்களே வாயை பிளந்து பார்ப்பது உண்மை.