OPS speech about central govt tax problem
மாநிலங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் மத்திய அரசு எந்த வரி கொண்டு வந்தாலும்அதை அதிமுக அரசு மிகக் கபடுமையாக எதிர்க்கும் என துணை முதலமைச்சர் ஓபிஎஸ் எச்சரித்துள்ளார்.
அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டை புதுப்பித்தலுக்கான படிவங்கள் வினியோகம் சென்னை ராயப்போட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று தொடங்கியது.
கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் விண்ணப்ப படிவங்களை வழங்கி தொடங்கிவைத்தனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் ஓபிஎஸ், உள்ளாட்சி தேர்தல் நடைபெறக்கூடிய பூர்வாங்க பணிகள் நடைபெற்று, முடிவடையும் நிலையில் உள்ளன என்றும் . மறுவரையறை செய்யும் பணிகள் நடந்து முடிவடைந்துள்ள நிலையில் ஐகோர்ட்டு தீர்ப்பு வந்ததும் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்றார்..
மத்திய அரசால் கொண்டு வரப்படும் எந்த வரியும், மாநில உரிமைகளை பறிக்கிற வகையில் இருந்தால் அதை முழுமையாக எதிர்ப்போம் என்றும் ஓபிஎஸ் திட்டவட்டமாக தெரிவித்தா
