நடிகர் கமலஹாசனை  தொடர்ந்து மிரட்டி வருவது தமிழதுக அரசுக்கு நல்லதல்ல என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஊழல் குறித்து கருத்து சொல்வது நடிகர் கமலஹாசனின் உரிமை என்றும், அதற்காக அவரை மிரட்டுவதும், அடி பணிய வைக்க நினைப்பதும், தமிழக அரசுக்கு நல்லதல்ல என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரத்தில் அதிமுக புரட்சித்  தலைவி அம்மா அணி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்றுப் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், நீட் தேர்வால் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதாக குற்றம்சாட்டினார்.

ஜெயலலிதா மர்ம மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என தொடர்ந்து நாங்கள் வலியுறுத்தி வருகிறோம், ஆனால் தமிழக அரசு அதை கண்டுகொள்ளாமல் உள்ளது என தெரிவித்தார்.

ஊழல் குறித்து கருத்து சொல்வது நடிகர் கமலஹாசனின் உரிமை என்றும், அதற்காக அவரை மிரட்டுவதும், அடி பணிய வைக்க நினைப்பதும், தமிழக அரசுக்கு நல்லதல்ல என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.

கமலஹாசன் ஊழல் குற்றச்சாட்டு தெரிவித்தால் அதற்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டுமே தவிர மிரட்டுவது சரியாகாது என்றும், ஓபிஎஸ்  கூறினார்.