ops says that there will be action on eps
ஆர்.கே.நகர் தொகுதியில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக எழுந்த புகாரில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருந்தால் அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆர்,கே.நகர் தொகுதி இடைத்தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்பட்டதாக, அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையினர் நடத்திய ரெய்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.
அந்த ஆவணங்களில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பணப்பட்டுவாடா செய்ததற்கான ஆதாரங்கள் இருந்ததாக வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் அந்த ஆவணங்களை அவர்கள் தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பி வைத்தனர்,இதையடுத்து எடப்பாடி உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவகாரத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பிருந்தால் அவர் மீது கண்டிப்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
தவறு செய்தவர்கள் அது யாராக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தான் ஜனநாயகத்துக்கு நல்லது என்று ஓபிஎஸ் கூறினார்.
