ops request to his cadres

எனது பெயரில் மன்றங்களை அமைத்து எனக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்து அந்நியப்படுத்தி விடாதீர்கள் என தொண்டர்களுக்கு முன்னாள் முதலமைச்சர் பன்னீர் செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

இந்நிலையில், எனது பெயரில் மன்றங்களை அமைத்து எனக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்து அந்நியபடுத்தி விடாதீர்கள் என்று தொண்டர்களுக்கு ஒ.பி.எஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தொண்டர்களின் ஆதரவும், மக்களின் ஆசியும் நமது பயணம் வெற்றி திசை நோக்கி செல்கிறது.

எனது பெயரில் மன்றங்களை அமைத்து எனக்கு பெருமை சேர்ப்பதாக நினைத்து அந்நியபடுத்தி விடாதீர்கள்.

அதிமுகவில் அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளும், மன்றங்களும் மட்டும்தான் செயல்பட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்