அதிமுகவின் இரு அணிகள் இணைப்புக்கு சாத்தியமில்லை என்றும், ஊழல் அரசுக்கு துணை போவது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்றும் முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், அதிமுகவின்  இரு அணிகள் இணைவது தொடர்பாக இது வரை தங்களுக்கு எந்த தகவலும் வரவில்லை என்று தெரிவித்தார்.

அணிகள் இணைப்பு குறித்து அமைச்சர்கள்தான் பேசிக் கொண்டிருக்கிறார்கள் தவிர, அதற்கான சாத்தியமே இல்லை என்று ஓபிஎஸ் தெரிவித்தார்.

இரு அணிகள் இணையும் விவகாரத்தில் எங்கள் முடிவை ஏற்கனவே தெரிவித்து விட்டோம் என்றும் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே இணைப்பு சாத்தியம் என ஓபிஎஸ் தெரிவித்தார்.

தற்போது  தமிழக அரசு என்றாலே அது ஊழல் அரசு என்றுதான்  மக்கள் கருதுகிறார்கள் என்று கூறிய ஓபிஎஸ், ஊழல் அரசுக்கு துணை போவது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி என  தெரிவித்தார்.