அதிமுக இரு அணிகள் இணைப்பு தொடர்பான பேச்சு வார்த்தை நிறைவு பெற்று விரைவில் நல்ல செய்தி வரும் என முன்னாள் முதலமைச்சர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைப்பு தொடர்பாக இரு தரப்பினரும் சில நாட்களான தொடர்ந்து பேசி வருகின்றனர். விரைவில் இணைப்பு தொடர்பாக நல்ல செய்தி வரும் என இரு தரப்பினருமே பேட்டி அளித்து வருகின்றனர்.

ஆனால் அதிகாரங்களை பகிர்ந்து கொள்வதில் இரு அணிகளுக்கு இடையே தொடர்ந்து இழுபறி நீடிப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ்,  கூடிய விரைவில் இணைப்பு பேச்சுவார்த்தை நிறைவு பெற்று நல்லசெய்தி வரும் என தெரிவித்தார்.

இரு அணிகளும் இணைவதற்கு பணம் கொடுக்கப்பட்டதாக வெளியாகியுள்ள தகவல் குறித்து ஓபிஎஸ்டம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதிலளித்த ஓபிஎஸ், மோசமாக அபத்தமாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் கூற முடியாது என கூறினார்.

எந்த ஒரு குடும்பத்தின்  இருப்புப் பிடியிலும் அதிமுக சிக்கி கொள்ள கூடாது என்பதே தங்களின் குறிக்கோள் என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.