தேனி  மாவட்டம் போடியை அடுத்த டாப் ஸ்டேஷன்  பகுதி காட்டூத் தீயில் சிக்கி தீவிர சிகிச்சை பெறும் மாணவிகளை, துணை முதலமைச்சர் ஓபிஎஸ் மற்றும் அமைச்சர்கள் போடி மருத்துவமனையில் நேரில் சென்று ஆறுதல்  தெரிவித்தனர்.

தேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில்  சென்னை மற்றும் திருப்பூர் பகுதியைச் சேர்ந்த 40 பேர்  மலையேறும் பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அங்ழு திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது. இதில் கல்லூரி மாணவிகள்  பலர் சிக்கிக் கொண்டனர்.


தீயில் சிக்கிக் கொண்ட  மாணவிகளை மீட்க அருகிலுள்ள கிராம மக்களும், வனத்துறை அதிகாரிகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் காட்டுத்தீயில் சிக்கிய 15 மாணவிகள் மீட்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

அவர்களில் தீக்காயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் தீக்காயம் அடைந்து, மலைப் பகுதிகளில் தவித்து வரும் மாணவிகளை டோலி மூலம் மீட்க  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், தேனி காட்டூத் தீயில் சிக்கி தீவிர சிகிச்சை பெறும் மாணவிகளை, துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள்  போடி மருத்துவமனையில் நேரில் சென்று ஆறுதல் கூறினர்.