நிலங்களின் வழிகாட்டி மதிப்பு உயர்வால் ரூ2 லட்சம் கூடுதல் செலவு- மக்களுக்கு சுமையை ஏற்படுத்தும் திமுக- ஓபிஎஸ்

, நிலங்களின் வழிகாட்டி மதிப்பை உயர்த்தியால் ஒவ்வொரு வீடு மற்றும் நில விற்பனையில் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்தும் நிலைக்கு மக்கள் ஆளாக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

OPS has accused the DMK government of increasing the guide value of lands and putting an additional burden on the people

நிலங்களின் வழிகாட்டி மதிப்பு உயர்வு

நிலங்களின் வழிகாட்டி மதிப்பினை உயர்த்தி மக்களின் மீது கூடுதல் சுமையை திமுக அரசு ஏற்படுத்தியுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை எண். 469-ல், நிலங்களுக்கும், வீட்டு மனைகளுக்கும் பத்திரப் பதிவுத் துறை நிர்ணயம் செய்யும் வழிகாட்டி மதிப்பீட்டை அ.தி.மு.க. அரசு பன்மடங்கு உயர்த்தியுள்ள காரணத்தால் வீடு கட்டும் தொழிலில் ஈடுபடுவோரும் பெருமளவில் பாதிப்புக்கு ஆளாகியிருப்பதோடு, ஏற்கெனவே வீடு கட்டும் தொழிலில் செலவிடப்பட்ட முதலீடுகளும் முடங்கிப் போய் பணப் புழக்கம் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்றும், இந்நிலையைப் போக்க வழிகாட்டு மதிப்பீட்டை நியாயமாக நிர்ணயிப்பதற்கு ஆய்வுக் குழு நியமிக்கப்பட்டு, அக்குழுவினரிடம் அறிக்கை பெற்று கட்டுமானத் தொழிலில் தற்போது ஏற்பட்டுள்ள சிக்கல்கள் தீர்க்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

OPS has accused the DMK government of increasing the guide value of lands and putting an additional burden on the people

இந்தத் தேர்தல் வாக்குறுதிக்கு மாறாக வழிகாட்டி மதிப்பை தி.மு.க. அரசு உயர்த்தியிருப்பதை பார்க்கும்போது 'படிப்பது இராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்' என்ற பழமொழிதான் மக்களின் நினைவிற்கு வருகிறது. 2023-2024 ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், 01-04-2012 முதல் உயர்த்தப்பட்ட நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 09-06-2017 அன்று முதல் ஒரே சீராக 33 விழுக்காடு குறைக்கப்பட்டதாகவும், அதே சமயத்தில் விற்பனை, நன்கொடை, பரிமாற்றம் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்கு இடையே அல்லாத ஏற்பாடு ஆவணங்களுக்கான பதிவு கட்டணம் ஒரு சதவீதத்திலிருந்து நான்கு சதவீதமாக உயர்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது நடைமுறையில் இருந்து வரும் வழிகாட்டி மதிப்பில் திருத்தத்தைப் பரிந்துரைக்க ஒரு குழுவை அரசு பரிந்துரைத்துள்ளதாகவும், இக்குழுவின் அறிக்கை பெறப்படும் வரை வழிகாட்டி மதிப்பை 08-06-2017 வரை கடைபிடிக்கப்பட்டு வந்த வழிகாட்டி மதிப்பிற்கு ஈடாக உயர்த்தவும், பதிவு கட்டணத்தை 4 சதவீதத்திலிருந்து 2 சதவீதமாகக் குறைக்கவும் அரசு முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

OPS has accused the DMK government of increasing the guide value of lands and putting an additional burden on the people

நிதிநிலை அறிக்கையின்படி, வழிகாட்டி மதிப்பு 33 விழுக்காடு உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும். அதாவது ஒரு சதுர அடி நிலத்தின் மதிப்பு 100 ரூபாய் என்றிருந்தால், அது 133 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்க வேண்டும். ஆனால், அவ்வாறு உயர்த்தப்படவில்லை என்றும், அவ்வப்போது பதிவான உயர் மதிப்புகளை கருத்தில் எடுத்துக் கொண்டு அதன் அடிப்படையில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளன.  இதன் காரணமாக நிலத்தின் மதிப்பு பெரும்பாலான இடங்களில் 50 விழுக்காடாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது ஒரு சதுர அடி 100 ரூபாய் என்றிருந்தால், அது 150 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இந்தச் சூழ்நிலையில் பதிவுக் கட்டணம் இரண்டு விழுக்காடு குறைக்கப்பட்டாலும், வழிகாட்டி மதிப்பு உயர்வு காரணமாக ஏற்கெனவே கட்டிய தொகையை விட கூடுதல் தொகையை பதிவுத் துறைக்கு செலுத்தும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். 

OPS has accused the DMK government of increasing the guide value of lands and putting an additional burden on the people

உதாரணமாக, ஏப்ரல் ஒன்றாம் தேதிக்கு முன்பாக ஒரு சதுர அடி நிலத்தின் விலை 5,000 ரூபாய் என்று வைத்துக் கொள்வோம். இதற்காக பதிவுத் துறைக்கு செலுத்த வேண்டிய கட்டணம் வழிகாட்டி மதிப்பில் 11 விழுக்காடு என இருந்தது. அதாவது 5,000 ரூபாய்க்கு 550 ரூபாய் செலுத்த வேண்டும். நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டபடி வழிகாட்டி மதிப்பு 33 விழுக்காடாக உயர்த்தப்பட்டிருப்பின், 5,000 ரூபாய் ஒரு சதுர அடி என்பது 6,650 ரூபாயாக உயரும். இதற்காக பதிவுத் துறைக்கு செலுத்த வேண்டிய கட்டணம் வழிகாட்டி மதிப்பில் 9 விழுக்காடு, அதாவது, 6,650 ரூபாய்க்கு 599 ரூபாய் பதிவுத் துறைக்கு கட்டணமாக செலுத்த வேண்டும். அதாவது ஒரு சதுர அடிக்கு 49 ரூபாய் அதிகம். ஆனால், தற்போது, வழிகாட்டி மதிப்பு 50 விழுக்காடு உயர்த்தப்பட்டு இருக்கிறது. அதாவது, 7,500 ரூபாயாக உயர்த்தப்பட்டு இருக்கிறது. இதற்காக செலுத்த வேண்டிய 9 விழுக்காடு பதிவுக் கட்டணம் 675 ரூபாய். அதாவது 5000 ரூபாய் என்ற ஒரு சதுர அடி நிலத்தின் வழிகாட்டி மதிப்பு 7,500 ரூபாயாக உயர்த்தப்பட்டு, 125 ரூபாய் கூடுதலாக மக்களிடமிருந்து வசூலிக்கப்படுகிறது. 

OPS has accused the DMK government of increasing the guide value of lands and putting an additional burden on the people

ஆனால், பதிவுத் துறை கட்டணத்தை குறைத்து நிலம் வாங்குபவர்களின் சுமையை அரசு குறைத்துவிட்டதாக விளம்பரப்படுத்தப்படுகிறது. உண்மை நிலை என்னவென்றால், ஏற்கெனவே செலுத்தி வந்த பதிவுக் கட்டணத்தைவிட, ஒவ்வொரு வீடு மற்றும் நில விற்பனையில் குறைந்தபட்சம் இரண்டு லட்சம் ரூபாய் கூடுதலாக செலுத்தும் நிலைக்கு மக்கள் ஆளாக்கப்பட்டுள்ளனர். ஒருபக்கம் வீட்டுக் கடனுக்கான வட்டி உயர்வு என்றால், மறுபக்கம் பதிவுக் கட்டண உயர்வு. இது கடும் கண்டனத்திற்குரியது. தற்போது தி.மு.க. அரசால் அமைக்கப்படவுள்ள குழுவின் பரிந்துரை வரப்பெற்றால், பொதுமக்கள் மேலும் கூடுதல் சுமைக்கு ஆளாக்கப்படுவார்கள் என்பதில் யாருக்கும் எவ்வித மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது. தேர்தல் வாக்குறுதியினை மனதில் நிலைநிறுத்தி, நிலத்தின் வழிகாட்டி மதிப்பினை உடனடியாக குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார். 

இதையும் படியுங்கள்

நாங்களே ஆட்சியை கலைத்தால்தான் நாடாளுமன்றத் தேர்தலுடன் சட்டமன்ற தேர்தல்..! இபிஎஸ்க்கு பதிலடி கொடுத்த டிகேஎஸ்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios