தனியார்மயத்தில் இரட்டை வேடம் போடும் திமுக.! ஏமாற்றுவதற்கு பெயர் தான் திராவிட மாடலா.? ஸ்டாலினை சீண்டும் ஓபிஎஸ்

சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிப்பது என்பது அரசுப் பேருந்து சேவையை நீர்த்துப் போகச் செய்வதற்கு சமம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் விமர்சித்துள்ளார்.

OPS has accused DMK of playing a double role in the privatization of bus services

சென்னையில் பேருந்து தனியார் மயம்.?

சென்னையில் பேருந்து சேவையை தனியார் மயமாக்கல் செய்ய இருப்பதாக வெளியான தகவலுக்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், எதிர்க்கட்சியாக இருந்தபோது தனியார்மயமாக்குதலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த தி.மு.க., ஆட்சிக்கு வந்தபிறகு தனியார்மயமாக்க துடிப்பது என்பது தி.மு.க.வின் இரட்டை வேடத்திற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு. அரசுப் பேருந்துகள் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கின்ற சென்னையில், தனியார் பேருந்துகளையும் அனுமதிக்க அரசு முடிவெடுத்துள்ளதாகவும், இதற்கான ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்டு இருப்பதாகவும், இதற்கு தொழிற்சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வந்துள்ளன. 

வதந்தி பரப்பிய பாஜக நிர்வாகி..! செக் வைத்த போலீஸ்.! 20 ஆம் தேதி வரை முன் ஜாமின் வழங்கிய டெல்லி நீதிமன்றம்

OPS has accused DMK of playing a double role in the privatization of bus services

திமுகவின் இரட்டை வேடம்

அரசு போக்குவரத்துக் கழகங்கள் இலாபத்தில் இயங்குவதற்காக தி.மு.க. குழு 2018-ல் தமிழக அரசுக்கு அளித்த பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு பேருந்து பயணக் கட்டணங்கள் சீரமைக்கப்படும் என்றும், போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றெல்லாம் வாக்குறுதி அளித்துவிட்டு, இவற்றிற்கு முற்றிலும் முரணாக தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிப்பது என்ற தி.மு.க. அரசின் முடிவு பொதுமக்களையும், போக்குவரத்துத் தொழிலாளர்களையும் ஏமாற்றும் செயல். ஒருவேளை ஏமாற்றுவதற்கு பெயர்தான் 'திராவிட மாடல்' போலும்!

OPS has accused DMK of playing a double role in the privatization of bus services

இலவச பஸ் பாஸ் நிறுத்தப்படும்

தி.மு.க. அரசின் தனியார்மயமாக்கும் முடிவு என்பது அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் செயல்பாட்டினை படிப்படிப்படியாக குறைத்து, ஒரு சில ஆண்டுகளில் முழுவதும் தனியார்மயம் என்ற நிலைக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது. இது தவிர, தனியார் பேருந்துகளை அனுமதிக்கும்பட்சத்தில், அந்த நிறுவனங்கள் இலாப நோக்கத்தில்தான் செயல்படுமே தவிர, சேவை மனப்பான்மையுடன் செயல்படாது. அரசுப் பேருந்துகளில் மகளிருக்கான இலவசம், மாணவ, மாணவியருக்கான இலவசம், மாற்றுத் திறனாளிகளுக்கான நிறுத்தப்பட்டுவிடும். இதன் இலவசம் காரணமாக ஆகியவை முற்றிலும் பாதிக்கப்படுபவர்கள் அரசுப்போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியும் தொழிலாளர்களும், பொதுமக்களும்தான் என்பதை அரசு மறந்துவிடக் கூடாது. 

OPS has accused DMK of playing a double role in the privatization of bus services

திட்டத்தை கைவிட வேண்டும்

ஒரு நிறுவனம் நஷ்டத்தில் இயங்குகிறது என்றால், அதனை இலாபத்தில் கொண்டு வருவதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டுமே தவிர, அந்த நிறுவனத்தையே மூடும் நிலைக்கு கொண்டு செல்லக்கூடாது. சென்னையில் தனியார் பேருந்துகளை அனுமதிப்பது என்ற தி.மு.க. அரசின் முடிவு மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை கொளுத்துவது என்ற பழமொழியைத்தான் நினைவுபடுத்துகிறது. பேருந்து சேவையை தனியாரிடத்திலே ஒப்படைப்பது என்பது இந்த நாட்டையே தனியாரிடத்தில் ஒப்படைப்பதற்கு சமம். தனியார் பேருந்துகளை அனுமதிப்பது என்பது அரசின் நிர்வாகத் திறமையின்மையைத் தான் எடுத்துக்காட்டுகிறது.எனவே, சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிப்பது என்ற முடிவை உடனடியாக கைவிட வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

தேர்தல் நடத்தை விதிகளை மீறினார் முதல்வர் ஸ்டாலின்..? தேர்தல் ஆணையத்தில் பரபரப்பு புகார் அளித்த அதிமுக

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios