6 மாத தர்ம யுத்தத்திற்கு பிறகு அதிமுக தலைமை கழகத்திற்கு வந்த முன்னாள் முதலமைச்சர் ஒபிஎஸ், தற்போதைய முதலமைச்சர் எடப்பாடியுடன் கைக்குலுக்கி இணைந்தார். 

நீண்ட நாள் பேச்சுவார்த்தைக்கு பிறகு ஒபிஎஸ் தரப்பும் இபிஎஸ்  தரப்பும் தற்போது இணைந்துள்ளது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை கழகம் வந்ததையடுத்து பன்னீர்செல்வமும் அங்கு வந்தார். கடந்த 6 மாதத்திற்கு பிறகு பன்னீர்செல்வம் தலைமை அலுவலகத்தில் கால் வைத்த பன்னீர் எடப்பாடி பழனிசாமியின் கையை குலுக்கி புன்முகத்துடன் அணி இணைப்பை அறிவித்தார். 

இதனை தொடர்ந்து புதிய அமைச்சரவை  பட்டியலை  ஆளுநர்  மாளிகை  வெளியிட்டது. அதன் படி  துணை முதல்வராக ஒ.பன்னீர்  செல்வம்  நியமிக்கப்பட்டுள்ளார்.இவருக்கு நிதித்துறை வழங்கப் பட்டுள்ளது.  முதல்வராக பழனிசாமியே பதவியில் இருப்பார். மற்ற அமைச்சர்களுக்கு   இலாகாக்கள்   ஒதுக்கீடு செய்து பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.மேலும்,ஓபிஎஸ் அவர்கள் துணை முதல்வராக இன்று  மாலை 4.30  மணிக்கு பதவியேற்க உள்ளார் .இதனை தொடர்ந்து அதிமுகவினர் பட்டாசு வெடித்து தங்கள் மகிழ்ச்சியை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர்.