பெருத்த  எதிர்பார்ப்பு :

பதற்றமான அரசியல் சூழலில்,  ஆளுநர் வித்யாசாகர்  ராவ் , இன்று மாலை  சுமார்  5  மணிக்கு  சென்னை  விமான நிலையத்தை  வந்தடைய உள்ளார்  இவரை  வரவேற்பதற்காக  முதல்வர் ஒ. பன்னீர்  செல்வம் விமான நிலையம்  சென்றடைய ஆயத்தமாகி  உள்ளார்.

சசிகலா  பின்னடைவு :

அதே நேரத்தில்,  இன்று மாலை அதிமுக பொதுச்செயலாளர்  சசிகலா,  தனது  ஆதரவு எம்பிக்களுடன் இன்று மாலை  மாலை   ஆளுனர்  வித்யாசாகர்   ராவை சந்திக்க  திட்டமிட்டு  இருந்தார்.

விரைந்தார்  ஒ பி எஸ் ...!!

இந்நிலையில்,  சென்னை விமான நிலையம்  வந்தடைய  உள்ள,  ஆளுனர் வித்யாசாகர் ராவை , முதல்வர்  ஒ பன்னீர் செல்வமே , முதலில் நேரில்  சென்று சந்திக்க  உள்ளார் என்பது  குறிப்பிடத்தக்கது. மற்றவர்கள்  அனைவரும் , ஒபிஎஸ் ஆளுநரை சந்தித்த  பின்னே , சந்திக்க  முடியும் என்பது குறிபிடத்தக்கது.