தமிழக சட்டப்பேரவை கூட்டம்..! அருகருகே அமர்ந்த இபிஎஸ்-ஓபிஎஸ்..! என்ன பேசிக்கொண்டார்கள் என தெரியுமா.?
தமிழக சட்டப்பேரவை கூட்டம் ஆளுநர் உரையோடு தொடங்கிய நிலையில் எதிரும் புதிருமாக இருக்கும் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி அருகருகே அமர்ந்துள்ளனர்.

அதிமுக ஒற்றை தலைமை மோதல்
அதிமுகவில் ஒற்றை தலைமை மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது. இரண்டு பேரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அதிமுக யாருக்கு சொந்தம் என நீதிமன்றத்தில வழக்கு நடைபெற்று வருகிறது. இதனையடுத்து சட்டமன்ற எதிர்கட்சி துணை தலைவராக ஆர்.பி.உதயகுமாரை நியமித்து இபிஎஸ் அணி சபாநாயகருக்கு கடிதம் அளித்தது. ஆனால் இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த ஓபிஎஸ் நீதிமன்றத்தில் வழக்கு இருப்பதாகவும் தான் தான் எதிர்கட்சி துணை தலைவர் என கடிதம் கொடுத்து இருந்தார்.
அருகருகே அமர்ந்த ஓபிஎஸ்-இபிஎஸ்
இந்த இரண்டு கடித்த்தையும் பரிசீலித்த சபாநாயகர் ஓபிஎஸ்க்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட எதிர்கட்சி துணை தலைவர் பதவிக்கான இருக்கையை ஒதுக்கியது. இதற்க்கு எதிர்ப்பு தெரிவித்த இபிஎஸ் அணி கடந்த முறை நடைபெற்ற தமிழக சட்ட பேரவை கூட்டத்தை புறக்கணித்து இருந்தது. இந்தநிலையில் இன்று ஆளுநர் உரையோடு தமிழக சட்டப்பேரவை தொடங்கிய நிலையில் இந்த கூட்டத்தில் எதிர்கட்சி தலைவர் என்ற அடிப்படையில் எடப்பாடி பழனிசாமிக்கு முதல் இருக்கையும், துணை தலைவர் என்ற முறையில் ஓ பன்னீர் செல்வத்திற்கு அதற்கு அடுத்த இருக்கையும் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்த இருக்கையில் இரண்டு பேரும் அருகருகே அமர்ந்துள்ளனர். ஆனால் இரண்டு பேரும் வணக்கம் கூட தெரிவிக்காமலும், எதுவும் பேசாமல் ஆளுநர் உரையை மட்டும் கவனித்தனர்

