சசியின் அண்ணன் மகனும், விவேக் மீதான கோபம் புகைந்து, புகைந்து தினகரன் மனதில் வெடித்துச் சிதறியே விட்டது. இதன் விளைவாக ஜெயா டி.வி. குழுமத்தில் இனி தன்னை, தன் கட்சியை பற்றிய செய்திகளுக்கு இடமில்லை! என்பதை தெளிவாக புரிந்து கொண்டுவிட்டார் தினகரன். விளைவு தனக்கென புதிய சேனலை கையிலெடுக்கும் முடிவுக்கு வந்துவிட்டாராம் தினகரன்.

தினகரன் புதிய சேனல் துவங்க விண்ணப்பித்தால் டெல்லி அதற்கு அனுமதி தராது என்பதால் ஏற்கனவே நட்டத்தியோ அல்லது பணமின்றியோ இயங்கிக் கொண்டிருக்கும் ஏதோ ஒரு சேனலை வாங்கும் முயற்சியில் அவரது ஆட்கள் சிலர் மார்க்கெட்டில் இறங்கியுள்ளார்களாம். ஆக தனி சேனல் துவக்குவதன் மூலம் சசிகலாவுக்கும் தனக்கும் இடையில் பிளவு ஏற்பட்டுவிட்டதென்பதை தெளிவாக தினகரன் அரசியல் உலகத்திற்கு உணர்த்திவிடுகிறார்! என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

தனது சித்தியிடமிருந்து  தினகரன் விலகுவதால், சசியிடம் நெருங்கிட ஆளும் அதிமுக அணி ரெடியாகிவிட்டதாம். தங்கள் தலைமையிலான அதிமுகவுக்கு எந்த செல்வாக்கும் பெரிதாய் இல்லை என்பதை இபிஎஸ், ஓபிஎஸ் இருவருமே உணர்ந்துவிட்டனர். மேலும் எதிர்வரும் உள்ளாட்சி மற்று சட்டமன்ற தேர்தல்களில் அதிமுக மேலும் சரிவடையும் என்றே அத்தனை கருத்துக்கணிப்புகளும், அலசல்களும், அரசியல் பார்வையாளர்களின் கோணங்களும் கூறுகின்றன.

எனவே தாங்கள் இருவரும் இணைந்து எந்த மாற்றத்தையும் கொண்டு வந்துவிட முடியாது என்று புரிந்து கொண்டிருக்கும் ஓபிஎஸ் - இபிஎஸ்  ‘சசிகலாவுடன் இணைந்து கழகத்தை வலுவாக்குவோம்’ எனும் முடிவுக்கு வந்துள்ளார்களாம். இதை அவர்கள் மட்டும் முடிவு செய்தால் போதாதே, பிஜேபி தலைமையிடமும் ஓகே. வாங்க வேண்டுமல்லவா?!

யெஸ் அங்கேயும் இதைப் பற்றி தெளிவாக பேசி, யதார்த்தத்தை விளைக்கி ஓகே. கேட்டுள்ளனர். அப்போது ‘சசிகலாவைதான் அதிமுக தொண்டர்கள் வெறுக்கிறார்களே! என்று எதிர்கேள்வி கேட்டதற்கு, ‘அம்மா இருக்கையில்தான் சின்னம்மாவை  தொண்டர்கள் வெறுத்தார்கள். ஆனால் இன்று அம்மா இல்லாத நிலையில் சின்னம்மாவை முழுமையாக ஏற்றுக் கொள்கின்றனர். ஸ்டாலினுக்கு எதிர்க்க ஒரு பலமான தலைமை தேவை என்றால் அது சின்னம்மா தான். அவர் வந்தால்தான் சிதறிக்கிடக்கும் கட்சி ஒன்றுபடும். நம்மால் எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் குறிப்பிட்ட இடங்களை ஜெயிக்க பதிக்க முடியும். 

என்னதான் சின்னம்மாவை தலைமையேற்க வைத்தாலும், எந்த காரணத்திற்காகவும் தினகரனை உள்ளே அனுமதிக்க மாட்டோம்.’ என்று சொல்லியுள்ளனர். பிஜேபியும் தினகரன் கூடவே கூடாது எனும் நிபந்தனையை மீண்டும் ஒரு முறை அழுத்தி சொல்லிவிட்டு, இந்த இணைப்புக்கு பச்சைக் கொடி காட்டிவிட்டதாம். சசி இத்தனை நாள் சிறைதண்டனை அனுபவித்துவிட்ட நிலையில், அவர் மீது இயல்பாக சிறு பரிதாபம் கொண்டிருக்கும் பிஜேபி., அவரை முன்கூட்டியே விடுதலை பண்ணிவிட யோசனை கூட வந்துவிட்டதாம். 

இதெல்லாம் நடக்கும் விதமாக இப்போது கர்நாடகாவில் பிஜேபி. ஆட்சி அமைந்துவிட்டதையும் நன்கு கவனிக்க வேண்டும். இந்த தகவல்களை அப்படியே சசியிடம் சொல்லியிருக்கின்றனர். தினகரன் மீது பலவித கடுப்பில் இருக்கும் அவரும் ஓகே என்று சொல்லிவிட்டாராம்.