Asianet News TamilAsianet News Tamil

அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ், இபிஎஸ் அவசர ஆலோசனை... அமைச்சர்களும் பங்கேற்பு..!

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் நாளை மாலை 4 மணிக்கு ஆலோசனையில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

OPS EPS emergency consultation at AIADMK headquarters
Author
Chennai, First Published Sep 17, 2020, 5:20 PM IST

சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் நாளை மாலை 4 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்களே உள்ள நிலையில் தேர்தலுக்கான பணிகளில் திமுக முழு வீச்சில் இறங்கியுள்ளது. ஆனால், அதிமுக தரப்பில் இருந்து அப்பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை. அதற்கு காரணம் முதலமைச்சர் வேட்பாளர் யார்? என்று தற்போது வரை அதிமுகவில் முடிவு எடுக்கப்படவில்லை.மீண்டும் எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சராக வர வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது ஓபிஎஸ்சை கடும் டென்சன் ஆக்கியது. இதனால் அவரை சமாதானம் செய்வதற்குள் இபிஎஸ் தரப்பிற்கு போதும் போதும் என்றாகிவிட்டது. 

OPS EPS emergency consultation at AIADMK headquarters

இந்நிலையில், நாளை மாலை 4 மணிக்கு சென்னை ராயபேட்டையில் இருக்கும் அதிமுக தலைமையகத்தில் ஓபிஎஸ்-ஈபிஎஸ் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர்கள், தலைமை நிர்வாகிகளும் பங்கேற்க உள்ளனர். இதில், முதல்வர் வேட்பாளர் தொடர்பாகவும், சசிகலா சிறையில் இருந்து வெளியே வருவது தொடர்பாகவும், வருகிற சட்டமன்ற தேர்தலை எப்படி எதிர்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios