ஓபிஎஸ்க்கு ஒரு சதவீதம் கூட ஆதரவு இல்லை.. நீதிமன்றம் தலையிட முடியாது.. அப்படினா இதுவும் போச்சா?
ஒன்றரை கோடி உறுப்பினர்களின் குரல் முடக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. பொதுச்செயலாளர் தேர்தல் 1.50 கோடி உறுப்பினர்கள் மூலமே நடத்தப்படுகிறது. தேர்தல் நடத்த கூடாது என உயர்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது என இபிஎஸ் அணியினர் வாதங்களை முன்வைத்து வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் பதவி தேர்தலுக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி குமரேஷ் பாபு முன்னிலையில் விசாரணை தொடங்கி காரசார வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. முதலில் ஓபிஎஸ் அணியினர் வாதத்தை தொடர்ந்து தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டு வருகிறது. அதில், ஒன்றரை கோடி உறுப்பினர்களின் குரல் முடக்கப்பட்டுள்ளதாக கூறுவது தவறு. பொதுச்செயலாளர் தேர்தல் 1.50 கோடி உறுப்பினர்கள் மூலமே நடத்தப்படுகிறது. தேர்தல் நடத்த கூடாது என உயர்நீதிமன்றமோ உச்சநீதிமன்றமோ எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை.
இதையும் படிங்க;- இபிஎஸ் கோரிக்கை தேர்தல் ஆணையமே ஏற்கவில்லை! பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை விதியுங்க.. ஓபிஎஸ் அணியினர் வாதம்.!
ஓபிஎஸ்க்கு 1.50 கோடி உறுப்பினர்களில் ஒரு சதவீதம் கூட ஆதரவு இல்லை. தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டதால், நீதிமன்றம் இதில் தலையிட முடியாது. ஓபிஎஸ் நேரடியாக வழக்கு தொடரவில்லை. வழக்கு தொடர்ந்த மூவருக்கும் இதற்கான அடிப்படை உரிமை இல்லை. அடிப்படை உறுப்பினர்கள் அனைவருமே ஒற்றை தலைமைதான் வேண்டும் என வலியுறுத்தினர். ஜூலை 11 பொதுக்குழுவில் 2600க்கும் மேற்பட்ட உறுப்பினர்களில், 2100க்கும் மேற்பட்டோரின் ஒப்புதலுடன் ஒற்றைத்தலைமை உள்ளிட்ட தீர்மானங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையும் படிங்க;- தவிழ்ந்து வந்து பதவி பெற்ற இபிஎஸ்! பைத்தியம் பிடித்த கிறுக்கன் போல நடந்துகொள்கிறார்! வைத்தியலிங்கம் விளாசல்.!
பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளதை சுட்டிக்காட்டி, பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோர முடியாது. கட்சிக்கு பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்பட்டால்தான் கட்சி பிரச்னைகளை கையாள முடியும். ஒன்றுக்கும் மேற்பட்ட வேட்புமனுக்கள் இருந்தால் தேர்தல் கட்டாயம் நடைபெறும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலும் இதேபோலத்தான் வார இறுதியில் 3 நாட்கள் நடத்தப்பட்டது. உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் தலையிடக் கூடாது என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. கட்சியில் இருந்து நீக்கப்பட்டு 8 மாதங்களுக்குப் பிறகு வழக்கு தொடர்ந்துள்ளனர். ஜூலை 11ல் நிறைவேற்றப்பட்ட அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டுள்ளன என எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.