அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைய வேண்டும் என்பது தொண்டர்களின் விருப்பம் என்று அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

இரு துருவங்களாக இருந்த அதிமுக அணிகள் தற்போது ஒன்று சேருவதற்காக பேச்சு வார்த்தை நடந்து வருகிறது.

சென்னை துறைமுகத்தில் இருந்து புறப்பட்டுள்ள ஐஎன்எஸ் போர்க்கப்பலில் அனைத்து அமைச்சர்களும், எம்எல்ஏக்களும் பயணம் செய்கின்றனர். அதே வேளையில் இரு அணிகள் இணைவது குறித்த பேச்சு வார்த்தையும் அங்கு நடந்து வருகிறது.

சென்னை ஐ.என்.எஸ் கப்பலில் சசிகலா அணியினர் நடத்தி வரும் ஆலோசனையில் பங்கேற்ற அமைச்சர் செல்லூர் ராஜு, செய்தியாளர்களிடம் கூறியதாவது.

கட்சி ஒன்றுபட இரு அணிகளும் ஒன்றிணைய வேண்டும். அதிமுகவின் இரு அணிகளும் ஒன்றிணைந்தால் இரட்டை இலை சின்னம் மீட்டெடுக்கப்படும். மீண்டும் எங்களுடன் இணைவதில் ஓ.பன்னீர்செல்வம் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை என்றார்