எலான் மஸ்க், டிரம்ப் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நீதிபதி அருண் சுப்ரமணியனை தனது 'எக்ஸ்' தளத்தில் "சிக்கலானவர்" எனக் கூறியுள்ளார்

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்கரான நீதிபதி அருண் சுப்ரமணியன், சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்கான 10 பில்லியன் டாலர் நிதியை முடக்கிய டிரம்ப் நிர்வாகத்தின் உத்தரவுக்கு தற்காலிகத் தடை விதித்து, ஜனநாயகக் கட்சியினர் ஆளும் ஐந்து மாகாணங்களுக்கான மத்திய அரசின் மானியங்களை விடுவித்து தீர்ப்பளித்துள்ளார்.

கலிபோர்னியா, கொலராடோ, இல்லினாய்ஸ், மினசோட்டா மற்றும் நியூயார்க் ஆகிய மாகாணங்களைப் பாதிக்கும் டிரம்ப் முடக்கி வைத்திருந்த இந்த நிதி, மாகாணங்களால் நிர்வகிக்கப்படும் திட்டங்களில் பரவலான மோசடி, வரி செலுத்துவோரின் பணம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் கூறப்பட்டது. இதன் காரணமாகவே அந் சமூகப்பாதுகாப்பு திட்டங்களுக்காக அந்த நிதியை டிரம்ப் முடஜ்க்கி வைத்தார் என சுகாதார, மனித சேவைகள் துறை இந்த வார தொடக்கத்தில் அறிவித்திருந்தது.

இந்த நிதியை முடக்கி வைத்திருந்ததால், மில்லியன் கணக்கான குடும்பங்கள் நம்பியிருக்கும் குழந்தை பராமரிப்பு, குடும்ப உதவி மானியங்களைப் பாதித்தது. ஜனாதிபதி டிரம்ப் இந்த நிதியை விடுவிக்காததற்கு காரணம் வரி செலுத்துவோர் பணம் மோசடிகள் மூலம் சுரண்டப்படுவதாகவும், அதற்கு அவசரத் தலையீடு தேவை என்றும் அவர் கூறினார். ஆனாலும் மாகாண அரசுகள் இந்த நிதி முடக்கங்கள் சட்டவிரோதமானது, பேரழிவை ஏற்படுத்தக்கூடியது என்று கூறின.

இதிய வம்சாவளியைச் சேர்ந்த நியூயார்க்கின் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் பணியாற்றும் ஒரு அமெரிக்க மாவட்ட நீதிபதி அருண் சுப்ரமணியன், டிரம்ப் நிறுத்தி வைத்திருந்த மாகாணங்களுக்கான நிதி விடுவித்தது அமெரிக்காவில் பரபரப்பாக பேசப்படுகிறது.

இவர் 2023-ஆம் ஆண்டில் ஜோ பைடனால் நியமிக்கப்பட்டார். இந்த வழக்கில் மாகாணங்கள் வெற்றிபெறச் சிறிதும் வாய்ப்பில்லை என்பதை அறிந்தே அவர் இந்தத் தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளார். ஒரு தெளிவான சட்டப்பூர்வ உத்தரவு இல்லாத நிலையில், ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் நிதியை வழங்குமாறு நிர்வாகத் துறையை கூட்டாட்சி நீதிமன்றங்களால் கட்டாயப்படுத்த முடியாது.

நீதிபதி சுப்ரமணியன் பிறப்பித்த தற்காலிகத் தடை உத்தரவு முதல் படி மட்டுமே. வரும் நாட்களில், சுகாதார மற்றும் மனித சேவைகள் துறை நிதியை முடக்கியபோது சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட்டதா? என்பது குறித்து நீதிமன்றம் விரிவான வாதங்களைக் கேட்கும். இந்த தீர்ப்பு, பில்லியன் கணக்கான டாலர் சமூக நல உதவிகளின் தலைவிதியை மட்டுமல்லாமல், எதிர்கால நிர்வாகம் நாடாளுமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்ட செலவினங்களை நிறுத்துவதற்கு எவ்வளவு அதிகாரம் கொண்டிருக்கும் என்பதையும் தீர்மானிக்கக்கூடும்.

எலான் மஸ்க், டிரம்ப் உத்தரவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க நீதிபதி அருண் சுப்ரமணியனை தனது 'எக்ஸ்' தளத்தில் "பிரச்சனைக்குரியவர்" என்று குறிப்பிட்டுள்ளார். ​​ஒரு நீதித்துறைத் தீர்ப்பு எப்படி அமெரிக்க அரசியலின் மையப்பகுதிக்குள் நுழைந்துள்ளது என்பதை எலான் மாஸ்க் தெரிவித்த பிரச்சினைக்குரியவர் என்கிற வார்த்தை தெளிவுபடுத்தியுள்ளது. குழந்தைகள் பராமரிப்பு, குடும்ப நலத் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட சுமார் 10 பில்லியன் டாலர் மத்திய நிதியை முடக்குவதற்கான டிரம்ப் நிர்வாகத்தின் முடிவை தற்காலிகமாக நிறுத்திவைத்த அருண் சுப்ரமணியனின் தீர்ப்பைத் தொடர்ந்தே எலான்மாஸ்க் நீதிபதி அருண் சுப்ரமணியனை விமர்சித்துள்ளார்.