ops denied to answer about h raja

ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பா.ஜ.க.மூத்த தலைவர் ஹெச்.ராஜா அளித்த ஆலோசனையை ஏற்க மறுத்துவிட்டதாக பன்னீர்செல்வம் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஜெயலலிதா உயிரிழந்ததைத் தொடர்ந்து தமிழக அரசை பின்வாசல் வழியாக கைப்பற்ற மத்தியில் ஆளும் பா.ஜ.க. முயலுவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. ஆனால் இதற்கு அக்கட்சியின் மூத்த தலைவர்கள் மறுப்பு தெரிவித்தனர். 

நாட்டை ஆளும் பா.ஜ.க.வுக்கு பின்வாசல் வழியாக புக வேண்டிய அவசியம் இல்லை என்று தமிழிசை செளந்திரராஜன் வெடித்துச் சீறினார். இந்தச் சூழலில் ஹெச்.ராஜா தன்னை வந்து சந்தித்ததாகவும், அப்போது அவர் கூறிய ஆலோசனைகளை ஏற்க மனம் மறுத்துவிட்டதாகவும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதாவின் கொள்கையில் நான் உறுதியுடன் இருந்ததால் ராஜா கூறியதை நான் ஏற்கவில்லா. அவர் தன்னிடம் கூறியவற்றை நான் ஒரு போதும் வெளியே சொல்ல மாட்டேன். இவ்வாறு பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

அடிச்சு கூட கேப்பாங்க அப்பவும் சொல்லாதே கதையா இருக்கே