ops criticizing stalin
ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் தோல்வி பயம் காரணமாக ஸ்டாலின் ஏதேதோ புலம்புகிறார் என அதிமுக புரட்சி தலைவி அம்மா அணியைக் சேர்ந்த ஓபிஎஸ் தெரிவித்தார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஜெயலலிதா சமாதியில் எல்லாவற்றையும் நான் கூறி விட்டேன் . ஆனால் கோடை வெயிலின் சூடு தாங்காமல் ஸ்டாலின் பிதற்றி வருகிறார் என தெரிவித்தார்.

அப்பல்லோ மருத்துவமனையில் ஜெ.,க்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போது தேவையான வசதி இல்லையென்றால் அமெரிக்கா கொண்டு சென்று சிகிச்சை அளிக்கலாம் என தம்பி துரையிடம் தான் சொன்னதாகவும், இதை அவர் சசி குடும்பத்தினரிடன் கூறியதாக ஓபிஎஸ் தெரிவித்தார்.
ஆனால் அப்பல்லோவில் சிகிச்சை நல்ல முறையில் உள்ளது என்றும் .வெளிநாடு தேவையில்லை என சசிகலா சொன்னதாக, தம்பிதுரை தன்னிடம் கூறியதாகவும் அவர் தெரிவித்தார்.

ஜெ.,வுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்து அழைத்து சென்றால் நல்லது. மாறாக ஏதாவது ஆனால், கட்சிகாரர்கள் நமது வீட்டை சூறையாடி விடுவார்கள் என விஜயபாஸ்கரிடம், கூறியதாகவும், அவரும் அதை சசிகலாவிடம் தெரிவித்ததாகவும் ஓபிஎஸ் கூறினார்.
மூன்றாம் முறையாக முதலமைச்சர் ஆனபோது தனக்கு ஏற்பட்ட அவமானத்தை தான் 10 சதவீதம் கூறினேன், 90 சதவீதத்தை புதைத்து விட்டேன் என்று தான் கூறியதாக தெரிவித்த ஓபிஎஸ் அரசியல் லாபத்திற்காக ஸ்டாலின் கேட்கும் கேள்விக்கெல்லாம் பதில் தர முடியாது என்று அவர் தெரிவித்தார்.
ஆர்,கே,நகர் நகர் தொகுதியில் திமுக படுதோல்வியடையும் என்றும் அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவில்லை என்றும் ஓபிஎஸ் தெரிவித்தார்.
