சென்னையில் நாளை முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதால் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் சென்னை  வர வேண்டும் என்றும், ஓபிஎஸ் அழைப்பு விடுத்துள்ளார்.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரண்டாக உடைந்த அதிமுக, சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பின் மூன்றாக உடைந்தது.

ஓபிஎஸ் அணி, சசிகலா அணி என்ற இரு அணிகள் மட்டுமல்லாமல் எடப்பாடி பழனிசாமி அணி என்ற ஒரு தனி அணியும் உருவாகியுள்ளது.

இந்நிலையில் ஓபிஎஸ் மற்றும் எடப்பாடி பழனிசாமி அணிகள் இணைவதற்கு டி.டி.வி.தினகரன் 60 நாட்கள் கெடு விதித்திருந்தார். அந்த கெடு இன்றுடன் முடிவடைகிறது.

ஆனால் இந்த இரு அணிகளும் இணைவதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்பவில்லை. இதனால் என்ன நடக்குமோ என்ற பதற்றத்தில் அதிமுக தொண்டர்கள் உள்ளனர்.

இந்நிலையில் ஓபிஎஸ் தனது அணி சார்பில் நாளை ஆலோசனைக் கூட்டம் நடத்த உள்ளார்.

இது தொடர்பாக ஓபிஎஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் சென்னையில் நாளை முக்கிய ஆலோசனை நடைபெறவுள்ளதால் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியின் அனைத்து மாவட்ட நிர்வாகிகளும் சென்னை  வர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.