தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவை, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆளுநர் மாளிகையில் சுமார் 15 நிமிடம் சந்தித்து பேசினார்.

அவைத்தலைவர் மதுசூதனன், பி.எச் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோரும் உடன் சென்றனர்.

அப்போது முதலமைச்சர் பன்னீர்செல்வம் ராஜினாமாவை வாபஸ் பெறுவது குறித்து ஆளுநரிடம் ஆலோசத்ததாக தெரிகிறது.

மேலும் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்யுமாறு சசிகலா தன்னை மிரட்டியதாகவும், தமது ஆதரவு எம்.எல்.ஏக்களை சசிகலா சிறை வைத்துள்ளதாகவும் ஆளுநரிடம் பன்னீர்செல்வம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.

பெரும்பான்மையை நிரூபிக்க நேரம் ஒதுக்குமாறும் வேண்டுகோள் விடுத்ததாக தெரிகிறது.

இதையடுத்து கிரீன்வேல்ஸ் சாலையில் உள்ள அவரது வீட்டில் பன்னீர்செல்வம் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது தமிழகத்தில் நிலவும் அரசியல் சூழல் குறித்து ஆளுநரிடம் விரிவாக பேசியுள்ளோம்.

ஆளுநரின் சந்திப்பிற்கு பிறகு நல்லது நடக்கும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

ஜெயலலிதாவின் வாழ்த்துகளோடு அவைத்தலைவர் மதுசூதனன் தலைமையில் செயல்பட்டு கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

“தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மமே மீண்டும் வெல்லும்” என முதலமைச்சர் பன்னீர்செல்வம் உறுதியாக தெரிவித்தார்.