“நான் எங்கண்ணன் மாதிரி இல்லப்பே! ரொம்ப உக்கிரமான ஆளு”: பன்னீர் தம்பியின் பரபரப்பு சபதம்..
"சுந்தர். சி படம் மாதிரி யார் யாரை அடிக்கிறாங்க, யார் யாரை தூக்குறாங்கன்னே புரியாம போயிட்டிருக்குது அதிமுக கதை"
ஆக்சுவலி அ.தி.மு.க.வில் என்னதான் நடக்குதுன்னு எவருக்குமே புரியாத நிலைதான் போய்க் கொண்டிருக்கிறது. ஜெயலலிதான் மரணத்துக்குப் பின் சசிகலாவும் தினகரனும் சேர்ந்து பன்னீரை முதல்வர் பதவியிலிருந்து தூக்கினார்கள், அவர்களே எடப்பாடியாரை முதல்வராக்கினார்கள். இதனால் பன்னீர் தர்மயுத்தம் துவங்கினார். சசிகலா சிறை சென்றதும் எடப்பாடியாரும் தினகரனும் சேர்ந்து பன்னீரை ஒடுக்கினார்கள். தினகரன் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ.வானார். பிறகு பன்னீர் இணைந்த பின் அவரும் எடப்பாடியாரும் சேர்ந்து சசிகலாவையும், தினகரனையும் கட்சியை விட்டு நீக்கினார்கள். தினகரன் அ.ம.மு.க. துவக்கினார். வெளியே வந்த சசிகலாவும் தினகரனும் சேர்ந்து எடப்பாடியார், பன்னீர் அண்ட்கோவை வீழத்த திட்டமிட்டனர். அ.தி.மு.க. தேர்தலில் தோற்றது. இதன் பின் இப்போது சசிகலாவோடு தினகரனும் அ.தி.மு.க.வில் இணைய வேண்டும் என்று பன்னீர் தரப்பு சொல்லி வருகிறது. எடப்பாடியார் கடுப்பில் இருக்கிறார். சசிகலாவை சந்தித்த ஓ.ராஜாவை பன்னீரும் எடப்பாடியாரும் சேர்ந்து கட்சியிலிருந்து நீக்கினார்கள். இப்போது ராஜா ஒரு சபதத்தை எடுத்துள்ளார்.
இப்ப சொல்லுங்க யார் யாருக்கு நண்பர், யார் யாருக்கு எதிரின்னு ஒரு இழவாச்சும் புரியுதா? சுந்தர் சி படம் மாதிரி யார் யாரை அடிக்கிறாங்க, யார் யாரை தூக்குறாங்கன்னே புரியாம போயிட்டிருக்குது அக்கட்சி.
ஒ ராஜாவின் சபதங்கள்
இந்த நிலையில்தான் சசிகலாவை சந்தித்து, அதனால் கட்சியிலிருந்து கட்டங்கட்டி நீக்கப்பட்டுள்ள பன்னிர்செல்வத்தின் தம்பியான ராஜா, செம்ம ரகளையாக சில சபதங்களைப் போட்டுள்ளார். அவை பின்வருமாறு “அம்மாவுக்குப் பின் அ.தி.மு.க. நிர்வாகத்தில் வந்த இருவருக்குள்ளும் ஒற்றுமையில்லை. இவங்களோட பிரச்னைகளாலேதான் தொடர்ந்து நாலு தேர்தல்கள்ள கட்சி படுதோல்வி அடைஞ்சிருக்குது. இனியும் இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். ரெண்டு பேரும் தலைமை பதவியில் இருந்தால் கட்சியை அழிச்சுடுவாங்க. இது உறுதிப்பே.”
“கட்சியை காப்பாற்றணும்னா சின்னம்மா வரணும்”
கட்சியை காப்பாற்றணும்னா அதுக்கு சின்னம்மா வரணும். இது பன்னீருக்கும் தெரியும். அதனால்தான் தேனி மாவட்ட நிர்வாகிகளை அழைச்சு, சின்னம்மாவுக்கு ஆதரவா தீர்மானம் போட்டார். ஆனால் மாஜி அமைச்சர் உதயகுமார் சந்திச்சு பேசியதும் தன் மனசை மாத்திக்கிறார். இப்ப கூட பாருங்க என்னை சஸ்பெண்ட் பண்ணி வெச்சிருக்கார்.
இதையும் படிங்க : சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவோம்- மாஜி அமைச்சர் பா.வளர்மதி அதிரடி
ஆனா நான் எங்கண்ணன் பன்னீர் மாதிரியில்லப்பே. ஒரு வேலைன்னு வந்துட்டாக்க உக்கிரமான ஆளு. அடிக்கடி மனசை மாத்திக்கிறவன் கிடையாது. கட்சியை காப்பாத்த சின்னம்மாதான் வரணும், அவங்க வந்தே ஆகணும்னு சபதம் போட்டு நம்புறேன். இதைத்தான் தொண்டர்களும் நம்புறாய்ங்க.” என்று தெறிக்கவிட்டிருக்கிறார். சர்தான்..!