இபிஎஸ்க்கு குடைச்சல் கொடுக்கும் ஓபிஎஸ்...! 5 மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அதிரடி

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக செயல்பட்டு வரும் ஓபிஎஸ், ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை  உள்ளிட்ட மாவட்டங்களுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அதிரடி காட்டியுள்ளார்.

OPS appointed new administrators for 5 districts including Ramanathapuram and Pudukottai

அதிமுகவில் மோதல்

அதிமுகவில் ஏற்பட்டுள்ள ஒற்றை தலைமை மோதல் காரணமாக ஓபிஎஸ்- இபிஎஸ் என பிளவுபட்டுள்ளது. இதனையடுத்து நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில்  அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனையடுத்து ஒரு சில பிரச்சனைகள் காரணமாக ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவில் இருந்து நீக்கி இபிஎஸ் நடவடிக்கை எடுத்தார். இதனையடுத்து நீதிமன்றத்தில் இரு தரப்பு வழக்கு தொடர்ந்த நிலையில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்க்கு ஆதரவாக மாறி மாறி நீதிமன்றத்தில் தீர்ப்பானது வந்துள்ளது. இதனையடுத்து உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு விசாரணையானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தனக்கு இருக்கும் நெருக்கடியை மறைக்கவே இபிஎஸ் இப்படி செய்கிறார்.. போட்டு தாக்கும் மா.சுப்பிரமணியன்.!

OPS appointed new administrators for 5 districts including Ramanathapuram and Pudukottai

புதிய நிர்வாகிகளை நியமித்த ஓபிஎஸ்

இந்தநிலையில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக செயல்படுபவர்களை அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி அறிவித்து வருகிறார். ஆனால் அதே நேரத்தில் அதிமுகவில் தனது அணியை ஒவ்வொரு மாவட்டமாக ஓ.பன்னீர் செல்வம் பலப்படுத்தி வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களுக்கு மாவட்ட செயலாளர்களை நியமித்த ஓபிஎஸ் தற்போது மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள் நியமித்துள்ளார். தற்போது சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தென் சென்னை, மதுரை ஆகிய பகுதிகளுக்கு நிர்வாகிகளை நியமித்து அறிவிப்பு வெளியிட்டுளார். மேலும் புதிதாக நியமிக்கப்பட்டவர்களுக்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படியுங்கள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு..! கொலை வழக்கு பதிவு செய்து இபிஎஸ்யை கைது செய்ய வேண்டும்..! - எதிர்கட்சிகள்

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios