கிரீன் சிக்னல்? தமிழகத்தில் பாஜக தலைமையில் 3வது அணி? டெல்லி செல்லும் ஓபிஎஸ் - டி.டி.வி.தினகரன்?

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களான  அண்ணா மற்றும் ஜெயலலிதா குறித்து தொடர்ந்து அவதூறாக பேசியதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அரசியல் அரங்கை அதிரவைத்தது. 

OPS and TTV Dhinakaran going to Delhi tvk

தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அதிமுக விலகிய நிலையில் பாஜக தலைமை அழைப்பின் பெயரில் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி.தினகரன் டெல்லி செல்ல திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அதிமுக தலைவர்களான  அண்ணா மற்றும் ஜெயலலிதா குறித்து தொடர்ந்து அவதூறாக பேசியதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அதிரடி அறிவிப்பை வெளியிட்டு அரசியல் அரங்கை அதிரவைத்தது. 2024 மக்களவைத் தேர்தல் மட்டுமல்லாமல் 2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அதிமுக திட்டவட்டமாக தெரிவித்துவிட்டனர். 

OPS and TTV Dhinakaran going to Delhi tvk

இந்நிலையில் டெல்லி சென்றுள்ள பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இன்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா சந்திக்க உள்ளார்.

OPS and TTV Dhinakaran going to Delhi tvk

 இந்நிலையில் அதிமுகவை சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மறுபுறம் ஓபிஎஸ், டிடிவி.தினகரன், பாமக, தேமுதிக, புதிய தமிழகம் கட்சி உள்ளிட்ட சிறிய கட்சிகளை ஒற்றிணைத்து 3வது அணி அமைத்து போட்டியிட பாஜக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதற்காக ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோரை பாஜக தேசியத் தலைமை டெல்லிக்கு அழைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்படி இருவரும் நாளை மறுதினம் டெல்லி சென்று பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் பிற பாஜக முக்கிய நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.

OPS and TTV Dhinakaran going to Delhi tvk

அதிமுக வழக்கில் எடப்பாடி பழனிசாமியிடம் தொடர் தோல்விகளை சந்தித்து வரும் ஓபிஎஸ் பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து விட்டதை இந்த முறை பிடித்துவிட வேண்டும் என்பதால் பல்வேறு வியூகங்களையும் வகுத்து வருகிறார். அதேபோல், அதிமுகவையும் எடப்பாடி பழனிசாமியையும் கடுமையாக விமர்சித்து வரும் டிடிவி தினகரன், வரும் காலத்தில் இரட்டை இலை சின்னம் முடக்கப்படலாம் என திரியை கொளுத்தி போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios