ops and eps discussion with anbuchezhiyan
கந்துவட்டி அன்புசெழியனுடம் ஆலோசனை நடத்திய எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் பதவி விலக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சினிமா இணை தயாரிப்பாளரும், நடிகர் சசிகுமாரின் உறனிருமான அசோக்குமார், கந்துவட்டி பிரச்சனை காரணமாக சென்னை, வளசரவாக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
அசோக்குமார் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து, அன்புச்செழியன் தலைமறைவானார். அவர் மீது நடிகர் சசிகுமார் உள்ளிட்ட பலர் புகார் கொடுத்துள்ளனர்.

இந்த நிலையில், தலைமறைவான அன்புச்செழியனைப் பிடிக்க, போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். ஆனால் அன்புச்செழியன் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனிடையே அசோக்குமார் தற்கொலை வழக்கு தொடர்பாக தேடப்படும் அன்புசெழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவிற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், பைனான்சியர் அன்புச்செழியனின் முன் ஜாமின் மனு மீதான வழக்கை கிருஸ்துமஸ் பண்டிகைக்கு பின் விசாரிக்கப்படும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு இல்ல காதணி விழாவில் எடப்பாடி, ஓ.பி.எஸ். பங்கேற்றனர். அப்போது அன்புசெழியனுடன் விழாவில் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கருத்து தெரிவித்த பாமக நிறுவனர் ராமதாஸ், கந்துவட்டி அன்புசெழியனுடம் ஆலோசனை நடத்திய எடப்பாடி மற்றும் ஓபிஎஸ் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
