அகில பாரதத்தில் அ.தி.மு.க. மட்டும்தான் ஆல்டைம் வைபரேஷன் மோடிலேயே இருக்கிறது. யாராவது ஒருத்தர் நீக்கப்படுவதும், அவர் வெளியே வந்து அக்கட்சியை பற்றி மகா கேவலமாக பேசி கலா மாஸ்டர் ஸ்டைலில் ‘கிழி! கிழி! கிழி!’ என அந்தர் செய்வதும் வாடிக்கையாகி போயிருக்கிறது. 

அந்த வகையில் சமீபத்தில் மாஜி எம்.பி. கே.சி.பழனிசாமியை இரு முதல்வர்களும் சேர்ந்து கட்டங்கட்டி கட்சியை விட்டு நீக்கிவிட்டனர். வெளியே போன மனுஷன் ’என்னை வெளியேற்ற இவங்க யாரு?’ என்று வழக்கமான டயலாக்கை பேசிவிட்டு கமுக்கமா இருந்துட்டா பிரச்னையில்லை. ஆனால் இவரோ ஏகப்பட்ட ஆவணங்களை எடுத்து கையில் வைத்துக் கொண்டு பழனி-பன்னீர் வகையறாவை தூர்வாரி துவம்சம் பண்ணிக் கொண்டிருக்கிறார். 
அந்த வகையில் கோயமுத்தூரில் நேற்று ‘எடப்பாடி மற்றும் பன்னீருக்குள்ளே எந்த பிரச்னையுமில்லைங்க. ரெண்டு பேரும் உள்ளுக்குள்ளே முழு அண்டர்ஸ்டாண்டிங்ல போயிட்டிருக்காங்க. 

ஆனா அவங்களோட ஆளுங்களை ச்சும்மாங்காட்டிக்கு தூண்டிவிட்டு ரெண்டு பேருக்குள்ளேயும் பிரச்னை இருக்குற மாதிரி காட்டிக்கிறாங்க. இவங்க ரெண்டு பேரோட ஒரே எய்ம் என்னான்னா, கட்சி வண்டியை ஓட்டுற வரைக்கும் ஓட்டிட்டு, ஆட்சி போயிடுச்சுன்னா அப்படியே செட்டிலாகிடணும் அப்படிங்கிறதுதான்.” என்றவர், பிறகு ...
“மேலூர்ல தினகரனுக்கு கூடிய கூட்டம் இவங்களை யோசிக்க வெச்சிருக்குது. தினகரனை பார்த்து இவங்க பயப்படுறாங்க. சசிகலாவை கூட சேர்த்துக்குவாங்க போல ஆனா தினகரன் இவங்களுக்கு ஆகுறதில்லை.” என்றிருக்கிறார். 

தினகரன் பற்றிய கே.சி.பி.யின் பஞ்ச் டயலாக்கை அ.தி.மு.க.வினுள் இருக்கும் சில சீனியர்களும் ஆதரித்திருக்கிறார்கள். தினகரனின் வளர்ச்சியும், அவருக்கு கூடிய கூட்டமும் இரு முதல்வர்களையும் முகம் கோண வைத்திருக்கிறதாம். தினகரனின் போக்கு குறித்தும், அவர் எந்த ரூட்டில் பயணித்து என்னவெல்லாம் செய்வார்? அதனால் நமக்கு என்னவெல்லாம் பிரச்னை? அதை எப்படி சமாளிக்க முடியும்! என்பதை இரு முதல்வர்கள் தரப்பும் தங்கள் ஆதரவு வட்டாரத்துடன் கவலையுடன் ஆலோசித்திருக்கிறது. 

ஆனால் தனித்தனியே ஆலோசனை நடத்தியதுதான் இதில் ஹைலைட்டே!