போன வாரம் டெல்லிக்கு வந்த நம்ம முதல்வரை சந்திக்க, நம்ம கட்சியிலிருந்து ஒன்னே ஒன்னு கண்னே கண்ணுன்னு கருவேப்பில்லை கொத்தாட்டம் தேர்வான எம்பி நீ வரவேற்க வரல, ஆனா நேத்து பிஜேபி செயல் தலைவர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெபி நட்டாவுக்கு வாழ்த்து போஸ்டரா? என ஓபிஆரை கலாய்த்து வருகின்றனர்.

பாஜகவின் தேசியத் தலைவராக நட்டா நியமிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக வதந்திகள் றெக்கை கட்டி பரவின. ஆனால், பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில்,  அமித் ஷாவின் பணிகளை பகிர்ந்து கொண்டு அவருக்கு உதவியாக நட்டா செயல்படவுள்ளார். 6 மாத காலத்திற்கு ஜேபி நட்டா, பிஜேபியின் செயல் தலைவராக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த குழு அந்தக் கட்சியின் அதிகாரம் கொண்ட குழுக்களில் முக்கியமான பதவி கிடைத்துள்ள நட்டாவுக்கு வாழ்த்து போஸ்டர் வெளியிட்டு அதிமுக புள்ளிகளை கண்சிவக்க வைத்துள்ளார் தேனி எம்பி ரவீந்திரநாத் குமார்.

தேர்தல் முடிவுகள் வெளியானதற்கு முன்பே குச்சனூர் கோவில் கல்வெட்டில்  ரவீந்திரநாத் எம்.பி என பெயர் போட்டது,  மத்திய அமைச்சர்கள் பட்டியல் வெளியாவதற்கு முன்பே மத்திய "அமைச்சரே வருக... வருக..." என ரவீந்திரநாத்தை வாழ்த்தி போஸ்டர் அடித்து ஊர் ஊராக ஒட்டியதும் பரபரப்பை கிளப்பியது என அரசியலில் கால் தடத்தை அழுத்தமாகவே பதிய வைத்தார் ஓபிஎஸ் மகன் ஓபிஆர். நின்ற முதல் தேர்தலில் ஆளும் கட்சியாக இருந்தும் மொத்த தொகுதியையும் கோட்டைவிட்டாலும் ரவிந்தரநாத்தின் தேனி  மட்டும் ஜெயித்தது ரத்தத்தின் ரத்தங்களான அம்மா விசுவாசிகளை எரிச்சலடையச் செய்தது.  

வேட்பாளராக அறிவிக்கப்பட்டதிலிருந்தே  அதிமுகவின் முக்கிய புள்ளிகளை அசால்டாக ஓவர் டேக் செய்து வந்த ரவீந்திரநாத், அப்பாவோடு காசிக்கு போய் காவி வெட்டி கட்டிக்கொண்டு தன்னை பிஜேபி தலைவர்களோடு இணக்கமாக இருந்தது அதிமுக முக்கிய தலைகளை கடுப்பை கிளப்பியது.

இந்நிலையில், ஜெ.பி நட்டா செயல் தலைவராக அறிவிக்கப்பட்டதால் அவருக்கு வாழ்த்து சொல்லும் விதமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகும்  போஸ்டரில், பாஜக தேசிய செயல் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள திரு ஜெ.பி நட்டா அவர்களுக்கு எனது உளமார வாழ்த்துகள் இப்படிக்கு ப.ரவீந்திரநாத்குமார் MBA MP. என போஸ்டர் அடித்து வெளியிட்டுள்ளார். 

இந்த போஸ்ட்ரைப் பார்த்த அதிமுக தொண்டர்களோ,  போன வாரம் டெல்லிக்கு வந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை ஒரு சொந்த கட்சி எம்பியாக வரவேற்க வரல.  ஆனா பாரு, பிஜேபியில செயல் தலைவரா தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெபி நட்டாவுக்கு வாழ்த்து போஸ்டர்? இதுவே  அம்மா இருந்திருந்தா இந்த மாதிரி போஸ்டர் அடிக்கும் தைரியம் வந்திருக்குமா? அமாம்... அம்மா இருந்திருந்தா நீயே யாருன்னு வெளியில தெரிஞ்சிருக்காது. அப்பறம் எப்படி போஸ்டர் அடிச்சிருப்ப? இந்த அலும்பளெல்லாம் உன் அப்பன் கொடுக்கும் தைரியம் தானே? ஜெயலலிதாவின் விசுவாசிகளும், அதிமுக தொண்டர்களும் சமூகவலைத்தளங்களில் வெளிப்படையாகவே கழுவிக் கழுவி ஊத்தி வருகின்றனர்.