இதைப் பார்த்து  ஸ்டாலினுக்கும், தினகரனுக்கும் பொறுக்க முடியவில்லை அம்மா பேரவை பொதுக்கூட்டத்தில் துணை முதல் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ஓபிஆர் என்கிற ரவீந்திரநாத்குமார் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர், எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஜெயலலிதா வழியில் இந்த கழகத்தை கட்டிக்காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பக்கம் கட்சி, ஒரு பக்கம் ஆட்சி. ஜெயலலிதா கொண்டு வந்த திட்டங்களை நிறைவேற்றுவதோடு மட்டுமல்லாமல், மக்களின் மனநிலை அறிந்து இன்று திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள்.


 
பொங்கலுக்கு ஒவ்வொரு குடும்பத்திற்கும் 2000 ரூபாய் இந்த அரசு கொடுத்துள்ளது. அடுத்து வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள தொழிலாளர்களுக்கு 2000 ரூபாய் வழங்க உள்ளது. இதையெல்லாம் பார்த்தவுடன் மக்கள் மத்தியில் இந்த அரசுக்கு பெரும் ஆதரவு நிலவி வருகிறது. 

இதனை பார்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும், டிடிவி.தினகரனுக்கும் பொறுக்க முடியவில்லை. 1 வாரத்தில், 1 மாதத்தில் இந்த அரசு போய்விடும் என்று நினைத்தால் 2 ஆண்டு காலம் கடந்து இந்த அரசு வீறு நடைபோட்டு மக்கள் ஆதரவுடன் பெரும்பான்மையுடன் நடந்து கொண்டிருக்கிறது. அசந்துபோய் உட்கார்ந்து இருக்கிறார்கள் என்ன செய்யலாம் என இவ்வாறு பேசினார்.