பிரமாண்ட கூட்டணி என்று அழைத்துக் கொண்டிருப்பவர்கள் தேர்தலில் வெற்றி பெற்றால் ஸ்டாலின் கூட பிரதமர் ஆகி விடுவார் என்று பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா கிண்டல் அடித்துள்ளார்.

உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் பா.ஜ.க வாக்குச் சாவடி முகவர்கள் மத்தியில் அமித் ஷா உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: எதிர்கட்சிகளுக்கு தங்களது பிரதமர் வேட்பாளர் யார் என்று கூறக் கூட துணிச்சல் இல்லை. ஒரு வேலை இந்த மெகா கூட்டணி வெற்றி பெற்றுவிட்டால் என்ன நடக்கும் தெரியுமா? தினமும் ஒரு கூத்தை நாம் பார்க்க வேண்டியிருக்கும். ஆம் மெகா கூட்டணி தேர்தலில் வென்றால் திங்கட்கிழமை மாயாவதி பிரதமராக இருப்பார. பிறகு திடீரென செவ்வாயன்று அகிலேஷ் யாதவ் பிரதமர் நாற்காலியில் அமர்ந்து கொண்டிருப்பார். சரி என்று நீங்கள் காத்திருந்தால் புதன்கிழமை அன்று மம்தா பானர்ஜி பிரதமராகியிருப்பார். போதாக்குறைக்கு வியாழனன்று சரத்பவாரும் கூட பிரதமர் ஆகிவிடுர். வெள்ளிக்கிழமை தேவகவுடா பிரதமர் நாற்காலியில் அமர்ந்திருப்பார். 

சனிக்கிழமை பார்த்தீர்களேயானால் ஸ்டாலின் பிரதமராகி இருப்பார். ஞாயிற்றுக்கிழமை விடுமுறை, அன்று யாருமே பிரதமராக இருக்க மாட்டார்கள். இப்படித்தான் மகா கூட்டணியின் ஆட்சி இருக்கும். மகா கூட்டணியை பொறுத்தவரை உறவினர்களுக்கு தான் முக்கியத்துவம். ஆனால் பா.ஜ.கவில் கட்சி தொண்டர்களுக்கு தான் முக்கியத்துவம். 

மகா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைத்தால் நாடு முன்னோக்கி செல்லாது. பின்னோக்கி தான் செல்லும். மோடி மீண்டும் பிரதமரானால் தான் வலிமையான பாரத்தை உருவாக்க முடியும். யோசித்து பாருங்கள் ஒரு நாளைக்கு ஒருவர் பிரதமராக இருந்தால் இந்தியா பலவீனமாகிவிடதா? கடந்த தேர்தலில் உத்தரபிரதேசத்தில் 73 தொகுதிகளை பா.ஜ.க  வென்றது. வரும் தேர்தலில் 74 இடங்களை வெல்ல வேண்டும். 

உத்தரபிரதேரச மக்களுக்கு நான் ஒன்று சொல்லிக கொள்கிறேன். ராமர் பிறந்த இடத்தில் ராமருக்கு நிச்சயமாக பா.ஜ.க கோவில் கட்டும். ராமர் கோவிலை சுற்றி உள்ள 42 ஏக்கர் நிலத்தை காங்கிரஸ் பறித்தது. தற்போது அந்த இடத்தை நாங்கள் உரியவர்களிடம் திருப்பி கொடுக்க உள்ளோம்.பிரச்சனைகள் வெகு விரைவில் தீரும். ராமருக்கு நிச்சயம் கோவில் கட்டுவோம். இவ்வாறு அமித் ஷா கான்பூரில் பேசியுள்ளார்.