Opposition to the GST legislation walks out in dmk
தமிழக சட்டப்பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஜி.எஸ்.டி மசோதா நிறைவேறியதையடுத்து திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
மறைமுக வரி விதிப்பைச் சீர்படுத்தி, இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான வரி விதிப்பு முறையை கொண்டு வர மோடி அரசு திட்டம் தீட்டியது.
இதற்கு ஏற்றவாறு ஜி.எஸ்.டி. என்னும் சரக்குகள் மற்றும் சேவைகள் வரி விதிப்பு அரசியல் சாசன திருத்த மசோதாவை பாராளுமன்றத்தில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி, கடந்த ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி தாக்கல் செய்தார்.
இதையடுத்து ஜி.எஸ்.டி மசோதா மீதான விவாதம் தொடர்ந்து இரண்டு நாட்கள் டெல்லியில் நடைபெற்றது. பின்னர், ஜி.எஸ்.டி மசோதா மாநிலங்களவையில் கடந்த 4 ஆம் தேதி நிறைவேற்றப்பட்டது.
இதைதொடர்ந்து நான்காவது நாளாக நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி ஜி.எஸ்.டி மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் இன்று நிறைவேற்றப்பட்டது.
இதனால் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. பின்னர், செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் வணிகர்கள் மற்றும் தொழிலதிபர்களை அழைத்து ஆலோசித்திருக்க வேண்டும் எனவும் ஆனால் அதை தமிழக அரசு செய்ய தவறி தவறிவிட்டதாகவும் குற்றம் சாட்டினார்.
மேலும், திமுக தலைவர் கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது அனைத்து வணிகர்களையும் கூட்டி ஆலோசனை நடத்தியதையும் ஸ்டாலின் நினைவு கூர்ந்தார்.
ஜிஎஸ்டி மசோதாவை பொறுப்புக்குழுவிற்கு அனுப்பி ஆய்வு செய்ய வேண்டும் என ஸ்டாலின் வலியுருத்தியுள்ளார்.
ஜி.எஸ்.டியில் உள்ள குறைகளை பேரவையில் திமுக எடுத்து கூறியதாகவும், அதை ஏற்க மறுத்ததால் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
