ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் எதற்கு.? என்கிற பதாகைகளை ஏந்தி கருப்புக்கொடி காட்டி திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். 

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு மேலும் ஒரு வாரம் காலதிற்கு நீடிப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று அறிவித்துள்ளார். குறிப்பாக டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அனுமதியளித்துள்ளது. தொற்று அதிகமுள்ள 11 மாவட்டங்களை தவிர்த்து மற்ற 27 மாவட்டங்களுக்கு இந்த அனுமதி பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், டீக்கடைகளுக்கு அனுமதி இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். 

Scroll to load tweet…

கடந்த கொரோனா அலையின்போது அதிமுக ஆட்சியில் இருந்தபோது மதுபானக்கடைகள் திறக்கப்பட்டன. அதற்கு திமுகவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஊரடங்கு காலத்தில் மதுக்கடைகள் எதற்கு.? என்கிற பதாகைகளை ஏந்தி கருப்புக்கொடி காட்டி திமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். ஆனால் இப்போது திமுக ஆட்சியில் கொரோனா காலத்தில் மதுக்கடைகளை திறக்க மு.க.ஸ்டாலின் அனுமதித்துள்ளதால் கடும் விமர்சனத்தை அவர் மீது முன் வைத்து வருகின்றனர். 

Scroll to load tweet…

இதற்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பலரும் ட்விட்டர் பக்கத்தில், #குடிகெடுக்கும்_ஸ்டாலின் என்கிற ஹேஸ்டேக்கை உருவாக்கி இந்திய அளவில் ட்ரெண்டாக்கி வருகின்றனர். இந்நிலையில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.,வுமான வானதி சீனிவாசன், “ஒவ்வொரு நாளும்
நோய் தொற்று ஆயிரக்கணக்கில்..
இறப்பு
நூற்றுக்கணக்கில் …
டாஸ்மாக் திறப்பு அவசியமா ??
ஒரு வருடத்தில்
போட்ட வேஷம் மாறியதோ??
ஒலித்த கோஷம் மறந்ததோ??
இதுதான் விடியலா??” என்று பதிவிட்டுள்ளார்.

Scroll to load tweet…

தமிழக பாஜக தலைவர் எல். முருகன், “கொரோனா நோய் தொற்றின் அபாயம் அதிகம் உள்ள காரனாத்தால் மதுக்கடைகளை கடைகளை மூடி உள்ளது. தற்பொழுது கொரோனா” நோய் தொற்றின் அபாயம் குறைந்து வருகிறது என்பதால் பல மாவட்டங்களில் மதுக்கடைகளை திறக்க தயாராகி வருவது தமிழகத்திற்கு பேராபத்தில் முடியும். கொரோனா நேரத்தில் மிக அத்தியாவசியமில்லாத இந்த கடைகள் திறக்க வேண்டிய அவசியம் என்ன? மதுக்கடைகள் திறப்பதற்கு அனைத்து தாய்குலங்களும் எதிர்ப்பு என்ற நிதர்சனமான உண்மையை தமிழக முதல்வர் உணரவேண்டும்.இன்னும்கூட காலமிருக்கிறது, தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பது என்ற முடிவை மறுபரிசீலனை செய்து நிரந்தரமாக மூட முன்வரட்டும். அரசு நல்ல முடிவை எடுக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.

Scroll to load tweet…

கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் போராட்டம் நடத்திய புகைப்படங்களை பதிவிட்டு இது அந்தர் பல்டி எனக் கூறி வருகின்றனர்.