Asianet News TamilAsianet News Tamil

பள்ளிகள் திறப்பு.. அடுத்தக்கட்ட நடவடிக்கை என்ன? அமைச்சர் செங்கோட்டையன் தீவிர ஆலோசனை..!

பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

Opening of schools... minister sengottaiyan consultation
Author
Tamil Nadu, First Published Nov 2, 2020, 1:06 PM IST

பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளுடன் தலைமைச் செயலகத்தில் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். 

கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் அனைத்தும் கடந்த 7 மாதத்திற்கு மேலாக மூடப்பட்டுள்ளன. மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடம் கற்கின்றனர். இந்ந்லையில், கொரோனா பாதிப்பு குறைந்து வருவதையடுத்து ஊரடங்கு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் பள்ளிகள், கல்லூரிகள் வரும் 16ம் தேதி முதல் செயல்படும் என்றும் தெரிவித்திருந்தார்.

Opening of schools... minister sengottaiyan consultation

மேலும், 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகள் வரும் 16-ம்தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்றும், பள்ளி, கல்லுரி பணியாளர் விடுதிகளும் வரும் 16ம் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படும் என்றும் தெரிவித்தார். தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளைத் திறக்க இரண்டு வார காலம் அவகாசம் உள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Opening of schools... minister sengottaiyan consultation

ஆலோசனையில் பள்ளிகளை திறக்கும்போது எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. வகுப்பறைகளில் கிருமிநாசினியை தெளித்து சுத்தப்படுத்துதல், மாணவர்கள் பாதுகாப்பாக வந்து செல்வதை உறுதி செய்தல் உள்ளிட்ட ஏற்பாடுகள் குறித்தும் ஆலோசனை நடைபெற்று வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios