Asianet News TamilAsianet News Tamil

தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை... அமைச்சர் செங்கோட்டையன் தகவல்..!

மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார்.

opening of schools in Tamil Nadu is not possible...minister sengottaiyan
Author
Tamil Nadu, First Published Jul 15, 2020, 11:40 AM IST

மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என அமைச்சர் செங்கோட்டையன் தகவல் அளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவில் பரவத் தொடங்கிய நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டன. அப்போது ஓரிரு தேர்வு எழுதிய மாணவர்களுக்கு தேர்வும் ரத்து செய்யப்பட்டது. மேலும், 1 முதல் 10ம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கு தேர்வின்றி தேர்ச்சி வழங்கப்பட்டுள்ளது.

opening of schools in Tamil Nadu is not possible...minister sengottaiyan

இந்நிலையில் அடுத்தக்கட்ட பாடங்களை தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலமாக தங்களது மாணவர்களுக்கு நடத்த தொடங்கியுள்ளன. இதனால் அரசு பள்ளி மாணவர்களுக்கும் பாடம் நடத்த அரசு ஏற்பாடுகளை செய்து வருகிறது. ஆன்லைன் மூலமாக படிக்க அனைத்து மாணவர்களுக்கும் வசதி இருக்காது என்பதால் தொலைக்காட்சி வழியாக பாடம் நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. எனினும் கொரோனா பாதிப்புகள் குறையும் பட்சத்தில் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்வியும் பெற்றோர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

opening of schools in Tamil Nadu is not possible...minister sengottaiyan

இந்நிலையில், கோபிச்செட்டிபாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்;- பள்ளிகள் திறப்பு தற்போது சாத்தியமில்லை. மாணவர்களுக்கு தொலைக்காட்சி வாயிலாக பாடம் நடத்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 14 சேனல்கல் பாடங்களை ஒளிபரப்ப முன் வந்துள்ளனர். இன்னும் 3 தினங்களில் பாடம் நடத்தும் பணி முழுமையாக தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டிலிருந்தே கல்வி கற்கவும், சந்தேங்களை கேட்கவும் அட்டவணை தயாரிக்கப்பட்டு வருகிறது. 

Follow Us:
Download App:
  • android
  • ios