Asianet News TamilAsianet News Tamil

நடக்காது சொன்ன செங்கோட்டையன்... நடத்தி காட்டும் எடப்பாடியார்.. அதிமுகவில் நடப்பது என்ன? விளாசும் தினகரன்..!

எடுத்தோம் கவிழ்த்தோம்' என்று பள்ளிகளைத் திறந்து மாணவ, மாணவிகளின் உயிரோடு விளையாடுவது சரியாக இருக்காது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

Open schools and play with students' lives? ttv dhinakaran
Author
Tamil Nadu, First Published Nov 3, 2020, 5:29 PM IST

எடுத்தோம் கவிழ்த்தோம்' என்று பள்ளிகளைத் திறந்து மாணவ, மாணவிகளின் உயிரோடு விளையாடுவது சரியாக இருக்காது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் கூறியுள்ளார்.

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது அமலில் உள்ள தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு கடந்த மாதம் முடிவடைந்த நிலையில், ஊரடங்கை வரும் நவம்பர் 30ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் 9, 10, 11, 12ம் வகுப்பு வரை பள்ளிகள் நவம்பர் 16ம் தேதி திறக்கப்படும் என்றும், அனைத்துக் கல்லூரிகளும், ஆராய்ச்சி நிறுவனங்களும் நவம்பர் 16ம் தேதி முதல் திறந்து செயல்பட அனுமதிக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு பல்வேறு மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

Open schools and play with students' lives? ttv dhinakaran

இந்நிலையில், இது தொடர்பாக, டிடிவி தினகரன்  டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில்;- பள்ளிக்கூடங்கள் திறக்கப்படுவதில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் மனநிலையையும், கொரோனா தாக்கம் குறித்த உண்மை நிலையையும் உணர்ந்தே தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும். அதை விட்டுவிட்டு, 'எடுத்தோம் கவிழ்த்தோம்' என்று பள்ளிகளைத் திறந்து மாணவ, மாணவிகளின் உயிரோடு விளையாடுவது சரியாக இருக்காது.

Open schools and play with students' lives? ttv dhinakaran

'தமிழ்நாட்டில் பள்ளிகளைத் திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் இப்போதைக்கு இல்லை' என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் சொன்ன அதே நாளில், பள்ளிகளைத் திறப்பதற்கான அறிவிப்பை முதல்வர் வெளியிடுகிறார் என்றால் நிர்வாகத்தில் என்னதான் நடக்கிறது?

அடுத்த சில மணி நேரங்களில் உகந்த சூழல் ஏற்பட்டுவிட்டதா? மிக முக்கியமான பிரச்சினையில் கூட ஏன் இவ்வளவு குழப்பம்? என்ற கேள்விகள் மக்களிடம் எழுந்திருக்கின்றன. ஆட்சியாளர்கள் இதனைப் புரிந்து நடந்து கொள்வார்களா?" எனப் பதிவிட்டுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios