விடுதலைசிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வத்தை இன்று சந்தித்து பேசினார்.

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், வறட்சியால் பாதித்த விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்குவதாக அரசு அறிவிக்க வேண்டும். விவசாயிகளுக்கு இழப்பீட்டை கூடுதலாக வழங்க வேண்டும். மேலும் விவசாய தொழிலாளர்களுக்கு ஓர் ஆண்டில் 3 மாதங்களுக்கு ரூ.3000 இழப்பீடு தரவேண்டும் என வலியுறுத்தினேன். முதலமைச்சரும் பரிசீலனை செய்வதாக உறுதியளித்தார்.

இவ்வாறு அவர் கூறினார்.