Asianet News TamilAsianet News Tamil

இந்த 5 மாவட்டங்களில் மட்டும் மக்கள் கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க..!! எப்போது வேண்டுமானாலும் அடித்து ஊற்றுமாம்..

12,13 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில்  பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், அதேநாள் கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், அக்டோபர் 13 முதல் 15 வரை அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்,

Only in these 5 districts people  should be a little wary, Beat and pour whenever.
Author
Chennai, First Published Oct 12, 2020, 2:28 PM IST

மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நாளை 13-10-2020 அதிகாலை காக்கிநாடா அருகே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. மேலும் இதன் காரணமாக தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், சென்னை, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும், நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் முதல் குறைந்த பட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் பதிவாகக்கூடும், 

Only in these 5 districts people  should be a little wary, Beat and pour whenever.

கடந்த 24 மணிநேரத்தில் மகாபலிபுரம் (செங்கல்பட்டு) பெரியாறு (தேனி) திருக்கழுக்குன்றம் (செங்கல்பட்டு) தலா 3 சென்டி மீட்டர் மழையும், சின்னக்கல்லார் (கோவை) காஞ்சிபுரம் (உத்திரமேரூர்) காஞ்சிபுரம் (சோளிங்கர்) ராணிப்பேட்டை தலா இரண்டு சென்டி மீட்டர் மழையும் பதிவாகி உள்ளது. அக்டோபர் 12ஆம் தேதி மத்திய மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55-65 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதே அக்டோபர் 12ம் தேதி வடமேற்கு தென்மேற்கு வங்கக்கடல் பகுதி மற்றும் ஒடிசா கடலோரப் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 50-60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், இடையிடையே 70 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 

Only in these 5 districts people  should be a little wary, Beat and pour whenever.

.12,13 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில்  பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், அதேநாள் கேரளா மற்றும் கர்நாடக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40-50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், அக்டோபர் 13 முதல் 15 வரை அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45-55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும், எனவே மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோரப் பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை 13-10-2020 இரவு 11:30 மணி வரை கடல் அலைகளின் உயரம் 3.2 முதல் 1.8 மீட்டர் வரையிலும், வடதமிழக கடலோரம் கலிமார் முதல் புலிக்காட் வரை கடல் அலைகளின் உயரம் 2.0 முதல்  3.8 மீட்டர் உயரம் எழும்பக் கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios