அதிமுகவுக்கு எதிராக அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியுள்ள டி.டி.வி.தினகரனின் அணி நெல்லிக்காய் மூட்டைபோல் சிதறிவிடும் என்றும் கடைசியில் இந்த அணியில் அவர் மட்டுமே இருப்பார் என்றும் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், அதிமுக தலைமை பதில் கூற வேண்டிய விவகாரத்தில் கே.சி .பழனிச்சாமி தன்னிச்சையாக செயல்பட்டதால்தான் கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என தெரிவித்தார்.

. கே.சி.பழனிசாமி நீக்கத்திற்கும் பாஜகவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அவர் ஆட்சி வேறு, கொள்கை விவரங்கள் வேறு என்பதை அறியாமல் பேசியதால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

தினகரன் அணியில் இருந்து நாஞ்சில் சம்பத் விலகல் குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயகுமார்,  நெல்லிக்காய் கொத்திலிருந்து சிதறுவது போல, ஒவ்வொருவராக தினகரன் அணியிலிருந்து விலகி வருவார்கள் என்றும், தினகரன் கடைசியில் தனியாக நிற்பார் என்று பதிலளித்தார் என்றும் கூறினார்.

. மேலும் எம்.ஜி.ஆர், அண்ணாவை புறக்கணித்துவிட்டு தினகரனால் தமிழகத்தில் அரசியல் செய்ய முடியாது என்றும்  ஜெயகுமார் தெரிவித்தார்.