கொரோனா தொற்று இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேகமெடுத்து வருகின்றது. குறிப்பாக மத்திய பிரதேசம் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே செல்லுகின்றது.மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் ஜீலை 31ம் தேதி வரைக்கும் ஊரடங்கு பிறப்பித்துள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பில் இருந்து நோயாளிகளை காப்பாற்றுவதற்காக பிளாஸ்மா சிகிச்சை முறையை அம்மாநிலமுதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிமுகப்படுத்தியுள்ளார்.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இளம் டாக்டர் ஒருவர் மனநல துறையில் பணியாற்றி வந்துள்ளார்.இவர் தங்கியிருந்த மருத்துவமனையின் விடுதியின் 10வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.அவர் தற்கொலை செய்து கொண்ட பிறகு அதிகாரிகள் அந்த மாடிக்கு ஓடி சென்று பார்த்த போது அவரது செல்போன் கிடப்பதை பார்த்து அதை எடுத்துள்ளார்கள். அவருக்கு மிகுந்த மன அழுத்தம் இருந்தாகவும் அவருக்கு லீவு கிடைக்காமல் வேலை பார்த்து வந்திருக்கிறார் என்பதும் தெரியவந்துள்ளது.இந்நிலையில், டாக்டரை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை டாக்டர்கள் சிகிச்சை அளித்ததும் பலனளிக்காமல் அவர் உயிர் பிரிந்தது அங்குள்ளவர்களை கவலையில் 

கடந்த வாரம் இதே மருத்துவமனையில் பத்திரிகையாளர் ஒருவர் 4வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் இன்னும் அங்குள்ளவர்கள் மனதை விட்டு அகலவில்லை.