ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை என்றும் அதனை ஏற்க முடியாது என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். 

ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை என்றும் அதனை ஏற்க முடியாது என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார். பிரதமர் மோடி கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்தை கொண்டு வர முயன்று வருகிறார். அதற்கான சில திட்ட வடிவங்களை 2017 ஆம் ஆண்டு வகுத்துக் கொடுத்தது நிதி ஆயோக். 2018 ஆம் ஆண்டு, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கான வழிமுறைகளைப் பரிந்துரைத்தது சட்ட ஆணையம். மேலும், அதற்காகச் சட்டத்தில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்கும் என்றும் கருத்து தெரிவித்தது. அதற்கடுத்த ஆண்டுகளில் மோடியும், பாஜகவும் அவ்வப்போது இந்தத் திட்டம் குறித்து கருத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

2019ம் ஆண்டுக்கான பாஜக தேர்தல் அறிக்கையிலும், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் இடம்பெற்றிருந்தது. 2020ம் ஆண்டில், இந்தத் திட்டத்துக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் வரவேற்பு தெரிவித்திருந்தது. கடந்த நவம்பர் மாத இறுதியில், இந்தத் திட்டம் காலகட்டத்துக்கான தேவை என்று பிரதமர் மோடி பேசியிருந்தார். ஆரம்பம் முதலே எதிர்க்கட்சிகள் பலவும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவந்தன. இந்த நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது சாத்தியமில்லை என்றும் அதனை ஏற்க முடியாது என்றும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை ஒட்டேரியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் சரத்குமார் தலைமையில் மாநில மற்றும் மாவட்ட செயலர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த சரத்குமார், ஒரே நாடு ஒரே தேர்தல் என்பதை ஏற்க முடியாது, அது சாத்தியமில்லை. மத்திய அரசு நடப்பு கல்வியாண்டில் தமிழகத்திற்கு நீட் நுழைவுத் தேர்விலிருந்து விலக்களித்து ஆணை பிறப்பிக்க வேண்டும். அதிமுகவில் சசிகலாவை ஏற்பது என்பது அக்கட்சியின் உட்கட்சி விவகாரம், அது ஒரு பங்காளி சண்டை, இதில் வடமாநிலத்தவர் எல்லாம் தலையிட கூடாது என்று தெரிவித்தார்.